ஓட்டு போடுவதற்கு முன்னாடி இந்த வீடியோவ பாருங்க.. இ.வி.எம் மிஷினில் ஓட்டு போடுவது எப்படி?

வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும் தங்களின் கேள்விகளுக்கு பதில் அறிந்து கொள்ளலாம். 

EVM VVPAT Functioning Video : இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் சுமார் 90 கோடி நபர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் நடந்துவிட்ட நிலையில் 18ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் எளிமையாகவும், குழப்பம் இல்லாமலும் வாக்களிக்க தங்களால் இயன்ற அளவிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இம்முறை விவிபேட் மூலமாக நாம் அளித்த வாக்கு சரியான முறையில் சரியான வேட்பாளருக்கு சென்றுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.

மேலும் படிக்க – Check Your Name in Voter List Online: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிவது எப்படி?

EVM VVPAT Functioning Video

முதல் முறையாக வாக்களிப்பவர்களுக்கு சரியான முறையில் வாக்களிக்கின்றோமா? நம்முடைய வாக்கு சரியான வேட்பாளருக்கு சென்றதா என்ற குழப்பும், பதட்டமும் இருக்கும்.  நீங்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றீர்களா ? வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பு இந்த வீடியோவை பாருங்கள் !

VVPAT என்று ஒரு மிஷின் இந்த முறை தேர்தலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர்கள் தான் யாருக்கு வாக்களித்தேன் என்பதை அறிந்து கொள்ள இயலும். இந்த மிஷினில் இடம் பெற்றிருக்கும் டிஸ்பிளேயில் 7 நொடிகளுக்கு காட்டப்படும்.

மேலும் இந்த வீடியோவில் கண்ட்ரோல் யூனிட், VVPAT, மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் ஆகியவற்றை எப்படி இணைப்பது என்றும் விளக்க்கம் தரப்பட்டுள்ளது. முதல்முறை வாக்காளர்கள் போலவே, வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும் தங்களின் கேள்விகளுக்கு பதில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க : ஓட்டு போட வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலைய விடுங்க இதைப் படிங்க!

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close