Exit polls results of Puducherry, Kerala, Assam and West Bengal: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்கள் மற்றும் நிறுவனங்களால் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் சர்வே முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் தேர்தலில் கேரளாவில் பினராயின் விஜயன் தலைமையிலான இடது முன்னணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதி வாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் எட்டு கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ம் தேதி இன்று எட்டாவது கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அன்று தெர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு மேற்கொண்ட எக்ஸிட் போல் சர்வே முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன.
எக்ஸிட் போல் முடிவுகளில் கேரளாவில் பினராயின் விஜயன் தலைமையிலான இடது முன்னணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸும் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், இங்கே ஆட்சி அமைப்பதற்கு 16 இடங்களில் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரியில் நடத்தப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் 16-20 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எஸ்.டி.ஏ கூட்டணிக்கு 11-13 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரிபப்ளீக் - சி.என்.எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணிக்கு 16 - 20 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 11-13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
சி வோட்டர் - ஏபிபி
புதுச்சேரியில் சி வோட்டர் - ஏபிபி நடத்திய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 - 23 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கூட்டணி 6-10 இடங்களையும் மற்றவை 1-2 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம்
கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கு 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். எக்ஸிட் போல் முடிவுகள் கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
சி.என்.எக்ஸ் மற்றும் ரிபப்ளிக்
கேரளாவில் சி.என்.எக்ஸ் மற்றும் ரிபப்ளிக் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்கிற எக்ஸிட் போல் முடிவுகளில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி 72 - 80 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கூட்டணி 58 - 64 இடங்களைக் கைப்பற்றும் என்றும் பாஜக 01-05 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா
கேரளாவில் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளின்படி பினராயின் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 104 - 120 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 20 -36 இடங்களையும் பாஜக 0 - 2 இடங்களையும் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.
ஏபிபி - சி வோட்டர்
கேரளாவில் ஏபிபி - சி வோட்டர் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவில் சிபிம் 71 - 77 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 62 - 68 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாஜக 0 - 2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கு 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
சி வோட்டர் - ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகள்
மேற்குவங்கம் மாநிலத்தில் சி வோட்டர் - ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கான்கிரஸ் 152 - 164 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பாஜக 109 - 121 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
டைம்ஸ் நவ் - மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் டைம் நவ் ஊடகம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 158 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. பாஜக 115 இடங்களையும் இடது சாரிகள் 19 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இ.டி.ஜி ரிசர்ச்
மேற்கு வங்கம் மாநிலத்தில் இடிஜி ரிசர்ச் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 164 - 176 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. பாஜக -105 - 115 இடங்களைப் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் - இடது கூட்டணி - 10 - 15 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பி-மார்க்
மேற்கு வங்கத்தில் பி- மார்க் நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் - 152 - 172 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் பாஜக -112 - 132 இடங்களையும் காங்கிரஸ் - இடது கூட்டணி -10-20 இடங்களையும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சி.என்.என் நியூஸ் 18
மேற்கு வங்கத்தில் சி.என்.என் நியூஸ் 18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி -162 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. பாஜக பாஜக -151 இடங்களையும் காங்கிரஸ் - இடது கூட்டணி -15 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலம்
அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அஸ்ஸாமில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கு 64 தொகுதிகளில் வெற்றி பெற வேன்டும்.
சி வோட்டர் - ஏபிபி
அஸ்ஸாம் மாநிலத்தில் சி வோட்டர் - ஏபிபி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 58 - 71 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணீ 53 - 66 இடங்களையும் மற்றவை 0 - 5 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
பி-மார்க்
அஸ்ஸாம் மாநிலத்தில் பி-மார்க் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 62 - 70 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே போல, காங்கிரஸ் கூட்டணி 56 - 64 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அஸ்ஸாமில் மற்றவை 0 - 4 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா
அஸ்ஸாமில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 75 - 85 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி -40-50 இடங்களையும் மற்றவை 1 - 4 இடங்களையும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ்
அஸ்ஸாம் மாநிலத்தில் ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 74 - 84 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 40 - 50 இடங்களையும் மற்றவை 1 - 3 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.