ராமர் கோவில் விவகாரம் : பாஜகவின் பதட்டத்தை தணித்த விஷ்வ ஹிந்து பரிஷாத்!

இரு தரப்பு மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்பு தான் ராமர் கோவில் மீதான நிலைப்பாட்டைப் பற்றி எடுப்போம் என பாஜக 1989ல் அறிவித்தது.

By: Published: February 7, 2019, 3:41:59 PM

ராமர் கோவில் விவகாரம் : 2019 தேர்தல் நெருங்கின்ற நேரத்தில் இந்தியாவின் மிக முக்கியமான இந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷாத், இனி வர இருக்கும் நான்கு மாதங்களுக்கு ராமர் கோவில் தொடர்பாக எந்தவிதமான போராட்டமும் நடத்தப்போவதில்லை என்று தங்களின் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறது.

இதற்கான காராணங்கள் என்ன?

தேர்தல் என்பது ஜனநாயத்தின் திருவிழா. இந்த நேரத்தில் ராம ஜென்மபூமி விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிரச்சனைகள் செய்வது நியாயமற்றது என்ற முடிவினை நாங்கள் எடுத்ததால் இந்த அறிவிப்பினை வெளியிட்டோம். ஆனால் எங்களின் செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று வி.எச்.பி கூறியுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு, சர்ச்சைக்குரிய 67 ஏக்கர் நிலத்தை, ராம ஜென்மபூமி நிலத்தினை அதன் உரிமையாளர்களான ராம் ஜென்மபூமி நியாஸ் தொண்டு அமைப்பிற்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறது.இது குறித்த வி.எச்.பியின் நிலைப்பாட்டினையும் தங்களது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அதில் மத்திய அரசின் இந்த செயல்பாட்டினை தர்ம சன்சாத் வரவேற்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விஷ்வ ஹிந்து பரிசாத்தின் முடிவு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நிலவி வந்த பதட்டமான சூழல் தற்போது சரியாகத் துவங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆர்.எஸ்.எஸ் செயலாளர்கள் மற்றும் இந்து அமைப்பினர் 200 பேர் மந்திராலயத்தில் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது, தங்களின் முடிவினை அக்டோபர் மாதம் 18ம் தேதி தங்களின் நிலைபாட்டை வெளிப்படுத்தி, மத்திய அரசிற்கு அழுத்தம் தர ஆரம்பித்தது.

நாக்பூரில் நடைபெற்ற விஜய தசமி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகவன் பகவத், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலியுறுத்தி வந்தது.

ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பினருக்களுக்குள்ளே பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில் மேலும் மேலும் இந்த பிரச்சனைகளை கொண்டு வரும் பட்சத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இந்து அமைப்பிற்குள் பிரச்சனைகள் மற்றும் பிளவுகள் வரலாம்.

அதனால் பாஜகவிற்கும், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் இடையே மனஸ்தாபங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. விஷ்வ ஹிந்து பரிசாத்தின் இந்த முடிவால் பிரச்சனைகள் மற்றும் பதட்டங்கள் ஓரளவு குறைக்கப்பட்டப்பட்டுள்ளது.  மோகன் பகவத் தர்ம சன்சாத்திடம் “தற்போது நாம் என்ன முடிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வரப்போகும் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கும் என்று கூறியிருக்கிறார்.

ராமர் கோவில் விவகாரம் : பாஜகவிற்கு உறுதுணையாக நிற்கும் வி.ஹெச்.பி

விஷ்வ ஹிந்து பரிசாத்தின் இந்த முடிவால் பாஜகவிற்கு வி.எச்.பி. உறுதுணையாக நிற்கிறது என்று அறிந்து கொள்ள முடிகிறது. மற்ற இந்து அமைப்பினர் ராமர் கோவில் கட்டப்படுவது தொடர்பாக எடுத்திருக்கும் முடிவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் பரம் தர்மா சன்சாத் தலைவர் சங்கராச்சாரியா ஸ்வரூபானந்த் சரஸ்வதி, பிப்ரவரி 21ம் தேதி அன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த முடிவிற்கு அகில பாரதிய அக்கார பரிஷாத் ஆதரவு அளித்திருந்தது.

பாஜகவும் – இந்து அமைப்புகளும் – ராமர் கோவிலும்

இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சியின் போது சங்க் பரிவார் தலைவர்களான தட்டோபண்ட் தெங்கடி மற்றும் சிங்கால் ஆகியோர் ராமர் கோவில் பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்பார்கள். சர்-சங்சலாக் கே.எஸ். சுதர்ஷன் ”போதிய திறமையற்றவர்கள் தான் பிரதமர் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார்கள்” என்று வெளிப்படையாக தன்னுடைய அதிருப்தியையும் முன்பு அறிவித்திருந்தார்.

தற்போதைய நிர்வாகம், ஆட்சி ஆகியவற்றைப் பற்றி பாஜகவிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பெரிதாக கேள்விகள் எதுவும் எழுப்பியதில்லை. ஒருவரைத் தவிர. 2015ம் ஆண்டு பாரதிய மஸ்தூர் சங் அமைப்பின் தலைவர் கே.சி.மிஸ்ரா என்பவர், மோடிக்கு உணமையான ஏழ்மை நிலை என்றால் என்பதே தெரியாது. அதை அவர் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இருந்து கற்றுணர வேண்டும் என்று கூறினார். ஆனால் அதன் பின்பு நீண்ட விடுப்பில் போனவர் தான், தற்போது வரை எதைப்பற்றியும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ராமர் கோவில் தொடர்பாக மக்களின் எண்ணவோட்டத்தோடு நிற்க விரும்புகிறது என்றாலும் உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக ராமர் கோவில் விவகாரத்தை விசாரிக்கவில்லை. மேலும், மத்திய அரசோ, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தான் ராமர் கோவில் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும் என்று உறுதியாக நிற்கிறது. ராஜ்ய சபை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கடந்த நவம்பர் 1ம் தேதி “ராமர் கோவில் கட்டுவத்து தொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்கிறேன்” என்று கூறினார். ஆனால் அதன்பின்பு அவரும் ராமர் கோவில் விசயத்தில் அமைதியாகிவிட்டார்.

இந்து அமைப்பும் பாஜவும் வரலாற்றுப் பார்வை

தேசிய அளவில் பல்வேறு சங் பரிவார் அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதில் சிறப்பு இடத்தினை பெற்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். 1980ம் ஆண்டு பாஜக உருவாக்கப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவராக பாலாசாஹேப் தியோரஸ் இருந்தார். இதற்ப்கு முன்பு பாரதிய ஜன சங் என்ற அமைப்பினை ஆர்.எஸ்.எஸ் தீனதயாள் உபாத்யாய் உட்பட்டோர் சேர்ந்து உருவாக்கினார்கள். விஷ்வ இந்து பரிஷாத் இந்து தர்மத்தை காப்பதற்காகவும்,இந்து சமூகத்தினருக்கு சேவைகள் செய்வதற்காகவும் 1964ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாஜவிற்காகவும், விஷ்வ ஹிந்து பரிசாத்திற்காகவும் தொடர்ந்து தங்களின் ஆதரவை அளித்து வந்தனர். பாஜக உருவக்கப்பட்ட பின்பு, ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து சற்று விலகியே இருந்தது. ராமர் கோவில் விவகாரம் பெரும் பிரச்சனையாய் உருமாறும் காலம் வரை அந்த இடைவெளி அப்படியே இருந்தது.

1984 மற்றும் 1985 ஆண்டுகளில் ரத யாத்திரை மேற்க்கொண்டது விஷ்வ ஹிந்து பரிசாத். அதன்பின்பு பாலம்பூர் ரெசலியூசனை கொண்டு வந்தது. மக்களின் நம்பிக்கையை மதித்து நாம் நடக்க வேண்டும். ராம ஜென்மபூமியை இந்து மக்களிடமே திரும்ப அளிக்க வேண்டும். இந்த முடிவும் கூட இரு தரப்பு மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்பு தான் கொண்டு வர வேண்டும்  என பாஜக 1989ல் அறிவித்தது.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest General Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Explained why vhp is now lowering the ayodhya heat

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X