Filing Nomination: எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி விட்டன. தமிழகத்தில் நகரம் முதல் பின் தங்கிய கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். ஆகையால் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Live Blog
Election 2019 – Live updates: Last day of Filing Nomination
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் அனல் பறக்கிறது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது.
Read More
Read Less
பெரம்பலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செந்தில் குமாரின் மனுவை பெற மறுப்பு; 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் 3.20க்கு தாமதமாக வந்ததால் மனுவை ஏற்க மறுப்பு.
மக்களவைத் தேர்தலுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது.
தூத்துக்குடி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் இயக்குநர் கவுதமன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட த.மா.கா-வுக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் சைக்கிள் சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் த.மா.கா-வால் தற்போது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதியம் 2 முதல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் படி அமமுக வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் 3 மணி நேரமே மீதமுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தொகுதிக்கு ஒருவராக 38 பேரும், தூத்துக்குடி தொகுதிக்கு மட்டும் 2 பேரும் மொத்தம் 40 பொதுப் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகிறார்கள்.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் வெள்ளிக் கிழமை வெளியிடப்படுகிறது.
கடந்த 19-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல், இன்றுடன் நிறைவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. தவிர, வேட்பு மனுக்களை வரும் 29-ம் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 700 -க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய சென்னை வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.