17வது நாடாளுமன்ற தேர்தல் : முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு...

ஆந்திரா, அருணச்சலப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

General Election 2019 1st phase polling starts tomorrow : இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ம் தேதி துவங்கி மே 19ம் தேதி வரை நடைபெறும் தேர்தல்களின் முடிவுகள் மே மாதம் 23ம் தேதி அறிவிக்கப்படும்.

ஆந்திரா, அருணச்சலப் பிரதேசம், ஒரிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்

முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி
இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி
மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி
நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி
ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6ம் தேதி
ஆறாம் கட்ட தேர்தல் மே 12ம் தேதி
ஏழாம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி

முதற்கட்ட தேர்தல் எங்கெல்லாம் நடைபெற உள்ளது ?

543 தொகுதிகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்ற மக்களவையில், நாளை (ஏப்ரல் 11ம் தேதி) மொத்தம் 91 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.  ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதே போல் அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் (2 தொகுதிகள்), மேகலாயா (2 தொகுதிகள்), மிசோரம், சிக்கிம், நாகலாந்து மாநிலங்களில் உள்ள ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தெலுங்கானா – 17 தொகுதிகள், உத்திரகாண்ட் – 5 தொகுதிகள், அந்தமான் நிக்கோபர் தீவுகள் – 1 தொகுதி, லட்சத்தீவுகள் – 1 தொகுதி – என ஒரே கட்டமாக தேர்தல்கள் இங்கு நடைபெற உள்ளது. மொத்தம் 20 மாநிலங்களில் நாளை தேர்தல் துவங்குகிறது குறிப்பிடத்தக்கது.

General Election 2019 1st phase polling starts tomorrow

சட்டமன்ற தேர்தல்

11 ஏப்ரல் அன்று ஆந்திராவில் இருக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலும், 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டசபை தேர்தலும், 60 தொகுதிகளைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் 11 ஏப்ரல் அன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடைப்ற உள்ளது. ஒடிசாவில் முதற்கட்டமாக 28 தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close