General Election 2019 2nd phase polling : 17வது நாடாளுமன்ற தேர்தல்களில் இரண்டாவது கட்டம் 18ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 11ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கான தேர்தலும், ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒரிசா (முதற்கட்டம்) மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றன.
எத்தனை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது ?
அசாம் - 5, பிஹார் - 5, சத்தீஸ்கர் - 3, ஜம்மு - காஷ்மீர் - 2, கர்நாடகா 14, மகாராஷ்ட்ரா - 10, மணிப்பூர் 1, ஒடிசா - 5, தமிழ்நாடு - 39, திரிபுரா - 1, உத்திரப்பிரதேசம் - 8, மேற்கு வங்கம் - 3, புதுச்சேரி - 1 என 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
நாளை நடைபெற இருக்கும் தேர்தல்களில், தமிழகத்தில் மட்டுமே அதிக இடங்களில், ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மதுரையை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழா காரணமாக மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்கு சேகரிப்பு நடைபெற உள்ளது.
முக்கிய நகரங்களில் நாளை தேர்தல்
சென்னை பெருநகரில் உள்ள மூன்று தொகுதிகளான தென் சென்னை, வட சென்னை, மற்றும் மத்திய சென்னையில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் முதற்கட்டமாக 14 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. மத்திய பெங்களூரு, பெங்களூரு புறநகர், பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மாண்டியா, மற்றும் மைசூரு போன்ற முக்கிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
அதே போன்று, ஜம்முவின் ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரிலும், உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா, ஆக்ரா, அலிகார் ஆகிய தொகுதிகளும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. அதில் டார்ஜிலிங் தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது.
லைவ் அப்டேட்டினை உடனடியாக அறிந்து கொள்ள