ராகுலுக்கு எதிராக இரண்டாவது முறையாக போட்டியிடும் ஸ்மிரிதி இரானி…

உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 27 வேட்பாளர்களை தற்போது வரை அறிவித்திருக்கிறது பாஜக.

Election Results 2019 key constituencies
Election Results 2019 key constituencies

General Election 2019 Amethi Candidates : மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.

General Election 2019 Amethi Candidates

இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக நேரடியாக களத்தில் மோதும்கிறார்கள். 2014ம் ஆண்டு ஸ்மிரிதி இரானிக்கும் ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய போதும் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. ஆனாலும், ஸ்மிரிதி இரானியின் வருகையால், காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி கொஞ்சம் ஆடித்தான் போனது.

ராகுல் காந்தி 2009ம் ஆண்டு 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் 2014ன் தேர்தல் முடிவுகள் வேறொன்றாக இருந்தது.

அமேதியை வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகின்றார் ராகுல் காந்தி என ஸ்மிரிதி இரானி குற்றம் சுமத்த, ராகுலோ, “மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடக்கிறது. தொகுதிக்கு கொண்டு வரப்பட வேண்டிய முக்கியமான திட்டங்களை நிறைவேறவிடாமல் அவர்கள் தடுத்து வருகின்றார்கள்” என்று குற்றம் சுமத்துகிறார்.

நான் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மீண்டும் அமேதியில் என்னை வேட்பாளாரக அறிவித்து பொறுப்புகளை கொடுத்தமைக்கு நன்றி என்று ஹிந்தியில் ட்விட் செய்துள்ளார்.

மேலும் அனைத்து பாஜக வேபாளர்களுக்கும் வாழ்த்துகளை கூறிக்கொண்ட அவர், மீண்டும் மோடி ஆட்சி அமைய அனைத்து தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 27 வேட்பாளர்களை தற்போது வரை அறிவித்திருக்கிறது பாஜக. இன்னும் மூன்று வாரங்களில் தேர்தல் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார். எல்.கே அத்வானியின் தொகுதியான குஜராத் காந்தி நகரில் அமித் ஷா களம் இறக்கப்படுகிறார்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: General election 2019 amethi candidates smriti irani contests against rahul gandhi for a second time

Next Story
ஓ.பி.எஸ். மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன்: அமமுக 2-வது பட்டியல் அறிவிப்புthanga tamil selvan contest with ravindranath kumar, தங்க தமிழ்செல்வன், ரவீந்திரநாத் குமார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express