22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்!

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு, அதிமுக ஒரு சிறப்பான ஆட்சியை தந்திருந்தால் இன்று முடிவுகள் வேறாக இருந்திருக்கும்.

By: Updated: May 24, 2019, 03:44:48 PM

General Election 2019 AMMK Results and Vote Shares : நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு வங்கிகளை பெற்றுள்ளனர். நகர்புறங்களில் அதிக அளவு வாக்குகளை பெற்று அந்த தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்க வைத்திருக்கிறது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஆர்.கே. நகர் தொகுதி போன்று ஒரு  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை தருவார், அனைத்து தரப்பினருக்கும் சவாலான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒரு சில தொகுதிகளையாவது தன் வசம் தக்க வைத்திருப்பார்  என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவிற்கு இந்த தேர்தலில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும், ஸ்திரமான அடித்தளம் போடப்பட்டிருப்பதையே காட்டுகிறது இந்த தேர்தல் முடிவுகள்.

General Election 2019 AMMK Results and Vote Shares – 22 Assembly By Election Results

22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், பூந்தமல்லி, பரமக்குடி, சாத்தூர், பெரியகுளம், ஆண்டிபட்டி, மானாமதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நிலக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர், திருப்போரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது அமமுக.

மேலும் படிக்க : Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல்களில் அமமுகவின் பங்களிப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் மூன்றாம் இடத்தினை  தக்கவைத்துள்ளது அமமுக.

ஆரணி – 46,383
தஞ்சை 1,02,871
திருவண்ணாமலை – 38,639
நெல்லை – 62,209
கள்ளக்குறிச்சி – 50,179
தென்காசி – 92,116
திருச்சி – 1,00,818
அரக்கோணம் – 66,826
மயிலாடுதுறை – 69,030
விழுப்புரம் – 58,019
விருதுநகர் – 1,07,615
திண்டுக்கல் – 62,875
மதுரை – 85,747
தூத்துக்குடி – 76,866
சிவகங்கை – 1,22,534
கடலூர் – 44,865
சிதம்பரம் – 62,308
தருமபுரி – 53,655
தேனி – 1,44,050
ராமநாதம்புரம் – 1,41,806
நாகை – 70307

நாடாளுமன்ற தேர்தலில் அமமுகவிற்கு பதிவான வாக்குகள் 22 லட்சத்து ஆயிரத்து 564 ஆகும். வாக்கு சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் 5.38% வாக்குகளை கைப்பற்றியுள்ளது அமமுக.

அவர்களுக்குப் பின் நாம் தமிழர் கட்சியினர் 16,45,057 வாக்குகளை பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கு விகிதம் 3.99 ஆகும்.

மக்கள் நீதி மய்யம், 15,75,324 வாக்குகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளனர். 3.94% வாக்குகளை அவர்கள் தற்போது தங்களின் கைவசம் வைத்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 ammk results and vote shares

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X