General election 2019 Candidates nomination starts today : 7 கட்டமாக நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் துவங்குகிறது. ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதே போல் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அதே 18ம் தேதியில் நடைபெற உள்ளது.
26ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனைகள் 27ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 29ம் தேதி கடைசி நாளாகும். இன்று அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட உள்ளனர்.
சென்னையில் வேட்புமனுக்கள் எங்கு பெறப்படுகிறது?
பழைய வண்ணாரப்பேட்டை பேசின் ப்ரிட்ஜ் சாலையில் இருக்கும் மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வடசென்னை தொகுதிக்கான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.
அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம்.
மத்திய சென்னை தொகுதிக்கான வேட்பாளர்கள் செனாய்நகர் புல்லா அவென்யூ, 2வது குறுக்குத் தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்யலாம்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான வேட்புமனு தாக்கல் வியாசர்பாடி சர்மாநகர் 2வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் பெறப்படுகிறது.
மேலும் படிக்க : தமிழகத்தில் நாளை துவங்குகிறது வேட்புமனுத் தாக்கல்... சென்னையில் தேர்தல் அதிகாரிகள் யார்?