General Election 2019 Colourful Graffiti Awareness : நாளையில் இருந்து (ஏப்ரல் 11) ஏழு கட்டமாக இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும், 18 வயதினைக் கடந்து முதன்முறையாக வாக்களிக்க வரும் வாக்களர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.
விழிப்புணர்வு கூட்டங்கள், பிரச்சாரங்கள் என்று தங்களால் இயன்ற அளவு மக்களை வாக்களிக்க ஊக்கம் கொடுத்து வருகிறது. 90களில் வெளியான படங்களில் ஒன்றான பார்டர் வாக்களிக்கும் காட்சி ஒன்றினை பிரஸ் இன்ஃபெர்மேசன் பெரு (Press Information Bureau (PIB)) பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையம் பதிவிட்ட டிவிட்டர் பதிவு
இந்ந்தியா முழுவதும் ஆங்காங்கே வாக்களிக்க வேண்டிய தேவையை வழியுறுத்தி சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதனை ஒன்று திரட்டி இந்திய தேர்தல் ஆணையம் தங்களின் சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளது. மிகவும் வண்ணமயமான அந்த சுவரோவியங்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் வரையப்ப்பட்டவை.
April 2019
அந்த சுவரோவியங்களில் நோ வோட்டர் டூ பி லெஃப்ட் பிஹைண்ட் என்றும் அவர் ஓட் அவர் ரைட் என்றும் வரையப்பட்டுள்ளது. நாளை 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.