General Election 2019 DMK Second Term Alliance : மக்களவைத் தேர்தல் 2019 : இந்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசியக் கட்சிகள் பிராந்திய கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஆலோசனை மற்றும் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக
திமுக - காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஏற்கனவே அதிமுக தரப்பு பாஜக மற்றும் பாமக கூட்டணியில் உள்ளது. மய்யம் மற்றும் தினகரனின் அமமுக கட்சிகள் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்ற நிலையில் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருகின்றது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம்
கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரனும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி உறுதியானது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தோழமை கட்சிகளுக்கான இடங்கள், கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க : மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி ப்ரியா