Advertisment

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி ப்ரியா

General Election 2019 : முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி கமல்ஹாசனை சந்தித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajeshwari priya, ராஜேஸ்வரி

rajeshwari priya, ராஜேஸ்வரி

General Election 2019 : அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த காரணத்தால் பாமகவில் இருந்து விலகிய முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது 2011-ம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. அப்போது தொண்டர்களிடையே கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பைந்தமிழ் உள்ளளவும் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை” என்று சூளுரைத்தார். இதைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளையும் பாமக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தது.

ஆனால் பாமகவினர் சிலருக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிமுகவுடன் அதிரடி கூட்டணியில் இணைந்தது. இதனால் பலரும் பாமகவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக சாடி வந்தனர். இதனால் பாமகவினர் பலருக்கும் சங்கடமான நிலையும், அதிருப்தியும் ஏற்பட்டது.

General Election 2019 : கமல் ஹாசனை நேரில் சந்தித்த முன்னாள் பாமக நிர்வாகி ராஜேஸ்வரி ப்ரியா

இந்நிலையில், பா.ம.க-அதிமுக மற்றும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தது ராஜதந்திரமல்ல, அவமானம் என்று பரப்பாக அறிக்கை விட்டவர் பா.மா.க -வின் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி. அவர் தான் வகித்து வந்த பதவியை மட்டுமல்ல, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்தையும் விட்டு விலகினார்.

அவரை பாராட்டி அ.ம.மு.க தலைவர் டி.டி.வி தினகரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசன் ஆகியோர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். மேலும் விரைவில் கமல்ஹாசனை இவர் சந்திப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இன்று அக்கட்சியில் இணைந்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என்னுடைய இந்த தைரியமான முடிவை பல கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அண்ணன் சீமான் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார். தினகரன் தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்தன. அதேபோல்தான் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஹாசன் என்னுடைய இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து, நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதற்காகத்தான் அவரை சந்திக்க வந்தேன்” என்று கூறினார்.

Kamal Haasan Makkal Needhi Maiam Pmk General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment