வாக்காளப் பெருமக்களே… உங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க உதவும் சில கூகுள் செயலிகள்!

இந்த செயலிகள் வாயிலாக அரசியல் கட்சிகளின் பரப்புரைகளையும் அறிந்து கொள்ள இயலும். 

By: Updated: March 12, 2019, 11:49:45 AM

General Election 2019 Google Apps : தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செயலிகள் மற்றும் இணைய தளங்கள்.  வாக்காளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சில செயலிகள் மற்றும் இணைய தளங்களை வெளியிட்டுள்ளன.

General Election 2019 Google Apps and Websites

CVigil : தேர்தல் நடத்தல் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்க CVigil என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  தேர்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீதும் கட்சிகள் மீதும் இந்த செயலி மூலமாக புகார்கள் அளிக்கலாம்.

புகார் அளிக்கப்பட்ட 90 நிமிடங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் புகார் அளித்தவரிடம் தெரிவிக்கப்படும்.

Election Monitoring Dashboard

வாக்குச்சாவடி தொடர்பான களவிபரங்களையும் அறிந்து கொள்ள election monitoring dashboard என்ற இணையத்தினையும் பொது மக்கள் பயன்படுத்த இயலும்.

Voter Helpline Mobile App : இந்த செயலியின் வாயிலாக வாக்காளர்கள் பெயர் சரிபார்த்தல், புதிய வாக்களர்கள் பெயர் சேர்த்தல், தேர்தல் ஆணையம் அளிக்கும் முக்கிய அறிவிப்புகளை அறிந்து கொள்ளுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமாதன் – இந்த செயலி மூலமாக வாக்காளர்களால் தேர்தல் தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் அறிந்து கொள்ள இயலும். மேலும் புகார்களையும் வாக்காளர்களால் அளிக்க இயலும்.  வாக்களர்களுக்கு மட்டும் அல்ல வேட்பாளர்களுக்கும் சில செயலிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

வேட்பாளர்களுக்கான செயலிகள்

சுவிதா – வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களின் நிலை பற்றி அறிந்திட பயன்படுத்தலாம். இந்த செயலிகள் வாயிலாக அரசியல் கட்சிகளின் பரப்புரைகளையும் அறிந்து கொள்ள இயலும்.

மேலும் படிக்க : 90 கோடி வாக்காளர்களுடன் நடைபெரும் உலகின் பிரம்மாண்டமான தேர்தல் திருவிழா

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 google apps and websites for voters and candidates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X