General Election 2019 Most Controversial Incidents: மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல்களுக்கான கால அட்டவணையை அறிவித்தது. அன்று துவங்கி 7ம் கட்டம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்கள் முடியும் வரையிலும் பரபரப்பாகவே இருந்தது இந்திய துணைக்கண்டம். 90 கோடி மக்கள் வாக்களிக்கும் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவாகவே அமைந்தது இந்த தேர்தல். 70 நாட்களில் இந்தியாவில் நடைபெற்ற மிக சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்புகள் இங்கே.
General Election 2019 Interesting Facts
களம் இறங்கிய பிரபலங்கள்
மும்பையில், காங்கிரஸ் சார்பாக, பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மதுன்கர் களம் இறக்கப்பட்டார். பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் டெல்லியில் களம் இறக்கப்பட்டார். கர்நாடகாவில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
சௌகிதார்களாக மாறிய பாஜகவினர்
மார்ச் மாதம் 17ம் தேதியின் பின்மாலையில் இருந்து பாஜகவினர் தங்களின் சமூக வலைதள கணக்குகளில் பெயர்களுக்கு முன்பாக சௌகிதார்கள் என்ற அடைமொழியை பயன்படுத்த துவங்கினர். மக்களின் காவலர்கள் என்று அதற்கு பொருள். சௌகிதார் சோர் ஹை என்று காங்கிரஸ் வசை பாடத்துவங்கினாலும், அனைவரும் தங்களின் பெயருக்கு முன்னாள் இந்த அடைமொழியை பயன்படுத்தி தேர்தலை வரவேற்றனர்.
தென்னிந்தியாவை தேர்வு செய்த காங்கிரஸ் தலைமை
கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து. தென்னிந்தியாவில் காங்கிரஸ் தலைமை போட்டியிடுகிறது. 1978ம் ஆண்டு கர்நாடகா சிக்மங்களூரில் போட்டியிட்டார். 1980 தேர்தலில் ரே பரேலி மட்டும் இல்லாமல் தெலுங்கானாவின் மேதக்கில் போட்டியிட்டார். இறக்கும் வரையிலும் மேதக்கின் எம்.பியாகவே இருந்தார். சோனியா காந்தி 1999ம் ஆண்டு கர்நாடகாவின் பெல்லாரியில் போட்டியிட்டார். தற்போது ராகுல் காந்தி கேரளாவில் இருக்கும் வயநாட்டில் போட்டியிடுகிறார். வயநாட்டில் போட்டியிடுவதாக மார்ச் 31ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது காங்கிரஸ். ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட திருநெல்லி பாபநாசினி நதி வயநாட்டில் உள்ளதை செண்டிமெண்டல் டச்சாக பார்க்கின்றனர் காங்கிரஸார்.
மேலும் படிக்க : இந்திரா… சோனியா… ராகுல்… நேரு குடும்பத்தின் தென் திசை பாசம்
பாம்புடன் விளையாடிய ப்ரியங்கா காந்தி
உத்திரப்பிரதேசம் கிழக்கு பிராந்தியத்தின் பொதுச்செயலாளாராக நியமிக்கப்பட்டார் ராகுல் காந்தியின் தங்கை. எப்போதும் ரே பரேலி மற்றும் அமேதியில் மட்டுமே நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த ப்ரியங்கா காந்தி, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டார். பாம்புகளுடன் விளையாடுதல், தடுப்பு வேலையை தாண்டிச் சென்று வாக்களர்களிடம் பேசுதல், மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு, காரில் இருந்து இறங்கிச் சென்று வாழ்த்துகள் தெரிவித்தது என அனைவரின் மனம் கவர்ந்த முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார் ப்ரியங்கா காந்தி.
புகழ்மிக்க வங்க சீர்திருத்தவாதி சிலை உடைப்பு
மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, மற்றும் உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் 7 கட்டங்களாகவே தேர்தல் நடைபெற்றது. பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் நேரடியாகவே போட்டி வழுத்து வந்த நிலையில் கல்கத்தா கல்லூரி சாலை வளாகம் மற்றும் பிந்தன் சாரணி சாலையில் அமைந்துள்ள பண்டித் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் கல்லூரியிலும் தாக்குதல்களில் ஈடுபட்டனர் பாஜகவினர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர். மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் பற்றி பொறுப்பற்ற டெல்லி தலைவர்களுக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார்?
நரேந்திர மோடியின் இரண்டு முக்கியமான நேர்காணல்கள்
பிரதமர் நரேந்திர மோடியை நேர்காணல் செய்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அரசியல் சார்பில்லாத அந்த நேர்காணலில் மோடியின் இளமை வாழ்க்கை, அவர் துறவறம் மேற்கொண்டது, மாம்பழங்களை ஆசைப்பட்டு உண்டது, தேர்தல் நேரம் இல்லாத பிற நேரங்களில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் நட்பு பாராட்டுவது போன்ற மோடி பற்றி மக்கள் அறியாத மற்றொரு பக்கம் பற்றியதாக இருந்தது அந்த நேர்காணல்.
மேலும் படிக்க : மோடியின் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன தெரியுமா ? அக்ஷய் குமார் - மோடி நேர்காணல்!
ஐந்தாண்டுகால ஆட்சியில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தினார் நரேந்திர மோடி. கடந்த வெள்ளிக்கிழமையன்று (17/05/2019) இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் மோடியுடன் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
போபாலில் போட்டியிட்ட ப்ரக்யா சிங் தாக்கூர்
சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் பிரக்யா சிங் தாக்கூர். உடல் நிலை சரியில்லை என்று கூறி ஜாமீனில் வெளி வந்த இவருக்கு பாஜக போபாலில் போட்டியிட அனுமதி அளித்திருக்கிறது. பாஜகவின் இந்த முடிவால் காங்கிரஸ் கட்சியின் கடும் விமர்சனத்திற்கு ஆளானது பாஜக.
மாடுகள் குறித்தும் புற்று நோய் குறித்தும் தவறான தகவல்களை சொல்லி நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளானார் ப்ரக்யா. கோட்ஸே குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டதால் கட்சித் தலைமையின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் இவர்.
கோட்ஸே சர்ச்சைக் கருத்து
தமிழகத்தில் நடைபெற்ற நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸே சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றும், அவர் ஒரு இந்து என்றும் குறிப்பிட்டது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. பிரதமர் நரேந்திர மோடியே இந்த கருத்திற்கு பதில் தெரிவித்திருந்தார்.
முத்தாய்ப்பாக தியானத்தில் ஈடுபட்ட மோடி
இவையனைத்தும் ஒரு பக்கம் இருக்க, இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் நேரடியாக கேதர்நாத் குகையில் சென்று தியானத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார் நரேந்திர மோடி. தியானம் செய்ய வேண்டும் என்றால் யாரிடமும் எதையும் தெரிவிக்காமல் செல்ல வேண்டியது தானே என்று பலரும் கேள்வி எழுப்ப, கட்டில், மின்சார வசதி அடங்கிய லேட்டஸ் டெக் குகையில் தியானத்தில் ஈடுபட்டு 70 நாட்கள் பரபரப்பிற்கு ஓய்வு கொடுத்துக் கொண்டார் மோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.