2 பெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் : வெற்றிக்கு கை கொடுக்குமா கூட்டணி பலம்?

கார்த்தி சிதம்பரம், சர்ச்சைக்குரிய தலைவராக பாஜகவில் வலம் வரும் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

By: Updated: March 28, 2019, 02:03:39 PM

Arun Janardhanan

General Election 2019 Tamil Nadu : தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் நடக்கும் முதல் தேர்தல் இது. இரண்டு திராவிடத் தலைவர்கள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

அதிமுக இன்னும் ஜெயலலிதாவின் மறைவில் இருந்து வெளிவரவில்லை. கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியின் பொறுப்பை ஏற்றிருக்கும் மு.க.ஸ்டாலின், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் முக்கிய கொள்கை என்ற ரீதியில் தேர்தலில் இறங்கியுள்ளார்.

முந்தைய காலங்களில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தீர்க்கமாக உருவாக்கப்பட்ட கூட்டணிகள் போல் இன்றைய கூட்டணிகள் அமையவில்லை.

ஆனாலும் இரண்டு கட்சிகளும் மிகப் பெரிய அளவில மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இரண்டு கட்சிகளும் அதிக எண்ணிக்கையில் கூட்டணிகளுக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளதால், பல்வேறு தொகுதிகளில் தோல்விக்கான வழிவகுத்துத் தரலாம்.

General Election 2019 Tamil Nadu

பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

வட தமிழகத்தில் அதிக அளவு வன்னியர்கள் கொண்ட பகுதியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் பாமகவிற்கு, தென் தமிழகத்தில் அமைந்திருக்கும் திண்டுக்கல் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 2016 சட்டசபைத் தேர்தலில், திண்டுக்கலில் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளிலும் சேர்த்தே பாமகவிற்கு 7200 வாக்குகள் தான் கிடைத்தன.

பாஜக – அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வன்னியர்கள் குறைவாக உள்ள மத்திய சென்னையும் அந்த தொகுதிகளுக்குள் அடக்கம். தயாநிதிமாறன் அங்கு போட்டியிட, அவரை எதிர்த்து டோனி அண்ட் கை உரிமையாளர் சாம் பால் போட்டியிடுகிறார்.

தேமுதிகவிற்கு அளிக்கப்பட்ட தொகுதிகள்

விஜயகாந்தின் கட்சிக்கு கொடுக்கப்பட்ட நான்கு தொகுதிகள் குறித்து அதிமுக தலைவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். சேலம், திருப்பூர், வட தமிழகத்தில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் தேமுதிகவிற்கு இப்பகுதியில் எங்கும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நேரடியாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமியை எதிர் கொள்கிறார். விஜயகாந்தினின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார். ஆனால் அங்கும் அவரை எதிர்த்து திமுக தலைவர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி போட்டியிடுகிறார்.

பாஜகவிற்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள்

பாஜகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனை எதிர்த்து கனிமொழி கருணாநிதி நேரடியாக போட்டியிடுகிறார். இருவரும் நாடார் சமூகத்தின் வாக்குகளை பெறுவதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள். முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டாலும் கூட, கனிமொழிக்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக நயினார் நாகேந்திரனை போட்டியில் இறக்கியுள்ளது பாஜக. அவர் அம்மண்ணைச் சேர்ந்தவர் இல்லை. அமமுக முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் வி.டி.என். ஆனந்தை களம் இறக்கியுள்ளது. தேவர் சமூகத்தினர் அதிகம் கொண்டுள்ள இந்த தொகுதியில் வெற்றி பெற தேவர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை தான் போட்டியாளாராக களம் இறக்க வேண்டும் என்று மூத்த அதிமுக தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

திமுகவின் நிலை என்ன ?

திமுக – காங்கிரஸ் கூட்டணி இம்முறை தலீத் மற்றும் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து போட்டியை சந்திக்கிறது.

தேனி தொகுதி காங்கிரஸிற்காக ஒதுக்கப்பட்டது. ஜே.எம்.ஆருண் ரஷித் உடல் நலக்குறைபாடு காரணமாக போட்டியிட இயலாது என்று கூறிவிட, அவருடைய மகனும் இங்கு போட்டியிட இயலாது என்று மறுத்துவிட்டார். தேனியில் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் போட்டியிட உள்ளார். ரவீந்தரநாத்தும், ரஷீதின் மகனௌம் ஒன்றாக படித்தவர்கள் என்று சுற்றுவட்டாரம் தெரிவிக்கின்றது.

தேனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேனி தொகுதி பற்றி குறிப்பிடுகையில், என் விருப்பத் தொகுதி இல்லை. கட்சியின் பேரால் தான் நான் போட்டியிடுகிறேன் என்று கூறினார்.

முன்பொரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய கோவையை தற்போது இடதுசாரிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. ஆனால் இன்று கோவையில் இடதுசாரிகளின் வாக்கு வங்கி என்பது கேள்விக்குறிதான்.

சிவகங்கை தொகுதியில், ஊழல் புகார்களில் அடிக்கடி மாட்டிக் கொண்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், சர்ச்சைக்குரிய தலைவராக பாஜகவில் வலம் வரும் எச்.ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

மேலும் படிக்க : கனிமொழி Vs தமிழிசை : கருத்து சுதந்திரம் பற்றி பேச யாருக்கு உரிமையுண்டு ?

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 tamil nadu how patchy alliance may backfire without jeyalalitha and karunanidhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X