General Election 2019 Telangana Results : தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. 119 தொகுதிகளில் 88 தொகுதிகள் பெரும்பான்மை பெற்று வெற்றி அடைந்தது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி. இம்முறை தேர்தலில் 17 தொகுதிகளில் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக பாஜகவினை வரவேற்றிருக்கிறது தெலுங்கானா.
General Election 2019 Telangana Results
சந்திரசேகர் ராவின் மூன்றாம் அணி கனவும் அடியோடு கலைந்து போனது. அடிலாபாத், கரிம்நகர், செகுந்த்ராபாத் மற்றும் நிசாம்பாத் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைஸி தொடர்ந்து நான்காவது முறையாக ஹைதராபாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வருத்தம் என்னவென்றால் கே.சி.ஆரின் மகள் கவிதா போட்டியிட்ட நிசாம்பாத்தில் பாஜகவின் அரவிந்த் வெற்றி பெற்றுள்ளார். 2014ம் ஆண்டு தேர்தலில் நகர்புற தொகுதியான செகுந்தராபாத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தற்போது ஊர்புற தொகுதிகளான நிசாம்பாத், அடிலாபாத், கரிம்நகர் போன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
செவ்வல்லாவில் காங்கிரஸ் கட்சியின் கொண்டா விஸ்வேஷ்வரா ரெட்டி, போங்கீர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கொமட்டி ரெட்டி, வெங்கடரெட்டி முன்னிலை பெற்றனர். டி.பி.சி.சி. கட்சியின் தலைவர் என்.உத்தம் குமார் ரெட்டி நால்கொண்டாவில் முன்னிலை வகித்து வருகிறார்.
மேலும் படிக்க : மொத்த இடங்களிலும் வெற்றி வாகை சூடிய ஜெகன் மோகன்! என்ன செய்யப் போகிறார் மிஸ்டர் நாயுடு?