General Election 2019 Total amount flying squad seized : தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையிலான காலகட்டத்தில், பறக்கும் படை நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத பணம் ரூ.162.71 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால், ரூ.52 கோடி பணம் உரியவர்களிடம் திருப்பியளிக்கப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
கைப்பற்ற பொருட்கள் என்னென்ன என்பதை விவரிக்கிறார் சத்யப்ரதா சாஹூ
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சாஹூ கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரூ.400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கணக்கில் வராத பணம், தங்கம், வெள்ளி, மதுபான பாட்டில்கள் உள்ளிட்டைவகள் என பறக்கும் படை அதிகாரிகளின் சோதனைகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதத்தில், பறக்கும் படை சோதனைகளில் அதிக மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்ததில் முதலிடத்தில் இருந்த தமிழகம், தற்போது இரண்டாமிடத்தில் உள்ளது. ரூ.513.44 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து குஜராத் முதலிடத்தில் உள்ளது.
வேலூர் தொகுதியில் வருமானவரி அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்து தாங்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அறிக்கையும் அனுப்பவில்லை என்றும், வருமானவரி அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சாஹூ மேலும் தெரிவித்தார்.
மேலும் படிக்க : கோவையில் சிறைப்பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் பணமா ? நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு!