விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு...

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கப்போவதாக அறிவிப்பு

General Election 2019 Viduthalai Siruthaigal Katchi candidates : விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவிக்க உள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.  திமுக கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட உள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் :

சிதம்பரம் – தொல்.திருமாவளவன் (தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார்)

விழுப்புரம் – ரவிக்குமார் (உதய சூரியன் கட்சியில் போட்டியிடுகிறார்)

தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் பிரச்சனை

மோதிரம் இல்லை, வைரம் வேறு ஒருவருக்கு, பலாப்பழம் – உறுதி அளித்தார்கள் பின்பு மாற்றப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் காலம் தாழ்த்துவது சரியில்லை என தொல்.திருமாவளவன் கவலை அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஆந்திரா மற்றும் கேரளாவில் போட்டியிடும் விடுதலை சிறுத்தையினர்

தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களிலும் போட்டியிடுகின்றனர் விடுதலை சிறுத்தை கட்சியினர். கேரளாவில் இடுக்கி, கோட்டயம், கொல்லம் ஆகிய தொகுதிகளிலும், ஆந்திராவில்  குண்டூர், சித்தூர், விசாகப்பட்டினம், கடப்பா, திருப்பதி தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில், அதிமுக-பாஜக கூட்டணியின் தொகுதிப் பட்டியல் வெளியானது. அதே போல் இன்று காலை அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : யார் யார் எந்தெந்த இடங்களில் போட்டியிடுகின்றார்கள் ? 

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

×Close
×Close