Advertisment

இனவாத பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை - டிடிவி தினகரன்

மோடி போன்று நான் பொய்யான வாக்குறுதிகளை தருபவன் இல்லை என்று மக்கள் அறிவார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
By Election Tamil Nadu 2019 TTV Dhinakaran

Arun Janardhanan

Advertisment

General Election Tamil Nadu 2019 TTV Dhinakaran Interview : மக்கள் டிடிவி தினகரனை ஆரவாரமாக வரவேற்று அவருடைய பிரச்சாரத்தை பார்வையிட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக தொகுதிகளில் இந்த நிலை அதிகம் காணப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் அதிகம் கவனிக்கப்படும் ஒரு தலைவராக அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இருக்கிறார்.

குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அவருடைய ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 2017ல் வெற்றி பெற்ற பின்பு. இந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது டிடிவி தினகரனின் கட்சி. டிடிவி தினகரனிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் நடத்திய நேர்காணலின் தொகுப்பு இதோ.

General Election Tamil Nadu 2019 TTV Dhinakaran Interview

22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுற்ற பின்னர், அதிமுக ஆட்சி அமைக்க அமமுகவின் ஆதரவு தேவை என்றால், என்ன செய்வீர்கள் ?

இது அம்மாவின் ஆட்சி இல்லை என்று மக்கள் அடிக்கடி சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். இம்மக்கள் எனக்கு ஆர்.கே. நகர் தொகுதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு உண்மையான அம்மாவின் ஆட்சி தேவைப்படுகிறது.

மக்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டமும், அம்மா உயிருடன் இருந்த வரை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அம்மா நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அனுமதிக்கவே இல்லை.

நரேந்திர மோடியின் பாஜகவுடனோ, பாமக போன்ற இனவாத கட்சிகளுடனோ, விஜயகாந்தின் தேமுதிகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தனித்து களம் இறங்கினார். ஆனார் அவரின் மறைவிற்கு பின்னர், அம்மாவின் எதிராளிகளுடனே அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

மேலும் படிக்க : மோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி

புதிய சட்டமன்ற தேர்தல் அல்லது அதிமுக ஆட்சியை தலைமையேற்று நடத்துதல் - எதை விரும்புகிறீர்கள் ?

அதிமுகவில் எந்த விதமான ஊழலையும் செய்யாத நேர்மையான எம்.எல்.ஏக்கள் எங்களுடன் சேர விரும்பினார் அதிமுக ஆட்சியை தலைமையை ஏற்று நடத்துவேன்.

அதிமுக தலைவர்களுடன் மட்டும் தான் உங்களுக்கு பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது.

ஆமாம். வெறும் 12 நபர்களுடன் மட்டும் தாஅன். அவர்களிடம் நிறைய சொத்தும் பணமும் இருக்கிறாது. அதனால் தான் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

திமுக தலைவர் உங்கள் மீது தற்போதெல்லாம் குற்றச்சாட்டுகள் எதுவும் வைப்பதில்லையே ?

ஆர்.கே. நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றதில் இருந்து அவர் என் மீது பயத்தில் இருக்கிறார். திமுக ஏன் தோல்வி அடைந்தது என ஸ்டாலினுக்கு தெரியும். அம்மாவின் வாக்கு வங்கியில் 75%-னை நாங்கள் கைப்பற்றினோம். அதே போல் தான் இந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் அதிக இடங்களைப் பெறுவோம்.

நீங்கள் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா ?

இந்த கேள்விக்கு நான் நிறைய முறை பதில் அளித்துவிட்டேன்.  பாஜகவுடன், அவர்களின் இனவாத கொள்கைகள் காரணமாக நிச்சயம் கை கோர்க்க மாட்டேன். ஆனால் காங்கிரஸ் செக்யூலர் ஃபோர்ஸ். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தமிழர்களின் தேவைகளை ஒரு போதும் தீர்த்துவைத்ததில்லை. நீட் தமிழகத்திற்கு இல்லை என்று தான் ராகுல் கூறினார். ஆனால் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி பற்றியோ, மேகதாது நீர் தேக்க அணை பற்றியோ பேசவில்லை.
இதனால் தான் நாங்கள் இம்முறை தனியாக களம் இறங்குகின்றோம். மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பதற்காக நாங்கள் திமுக போன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.

உங்கள் சித்தி வி.கே. சசிகலாவிடம் அடிக்கடி ஆலோசனைகள் பெறுவதுண்டா ?

நான் அவர்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சந்திக்கின்றேன். கட்சியின் முழுப்பொறுப்பையும் அவர்கள் எனக்கு கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கலந்துரையாடுவேன்.

தேவர் வகுப்பினை சார்ந்தவர்கள் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர். ஆனால் அதே வகுப்பை சேர்ந்த நீங்கள் தலித் மக்களிடம் சுமூகமாக இருப்பது குறித்து !

ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் அனைத்து வகுப்பு மக்களும் அமைதியாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால் ஒரு சிலர் சாதிய அடிப்படையை காரணமாக வைத்து பிரச்சனையில் ஈடுபடுவதும் வழக்கம் தான். நான் தேவர் வகுப்பில் பிறந்தேன் என்பதை தாண்டியும் நல்ல தலைவராகவே அனைவருக்கும் இருக்கின்றேன்.

1999ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியின் எம்.பியாக இருக்கும் போது அம்மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தேன். ஒரு தேவர் இன தலைவராக என்னை பார்த்தால் எனக்கு ஆதரவு அளித்த 22 எம்.எல்.ஏக்களில் 4 நபர்கள் மட்டுமே தேவர் வகுப்பை சேர்ந்தவர்கள்.

தேவர் வகுப்பு தலைவராக என்னை சித்தகரிப்பது எதிரணியினரின் வேலை. மோடி போன்று நான் பொய்யான வாக்குறுதிகளை தருபவன் இல்லை என்று மக்கள் அறிவார்கள்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இவ்வளவு தூரம் பயணித்ததைப் பற்றி

ஒருத்தர் மற்றவர்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அரசியல் ரீதியான காரணங்களால் என் மீது வழக்கு தொடர்ந்தனர். நான் எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் பணியாற்றிய காலங்களில் என் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மக்களுக்குத் தெரியும் அனைவரும் அத்தனை பெர்ஃபெக்ட் ஆன ஆட்கள் இல்லை என்று. அவர்களிடம் இருந்து தான் தலைவர்கள் உருவாகின்றார்கள். ஆனால் மக்கள் தற்போது நல்ல தலைவனாக என்னை கண்டு கொண்டார்கள். என்னுடைய ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடியைப் பாருங்கள். மக்கள் எக்கச்சக்க நம்பிக்கையுடன் அவருக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்தனர். ஆனால் அவருடைய பொய்களாலே அவர் அழிந்து போனார். சுயநலமற்ற நல்ல தலைவர்களை மக்கள் விரும்புகின்றார்கள்.

பணம் வாக்குகளை வாங்கும் என்று நம்புகின்றீர்களா ?

வாக்குகளை வாங்கவோ, தேர்தலில் வெற்றி பெறவோ பணம் ஒரு போதும் உதவாது. இது போன்ற ஒரு விசயத்தை செய்ய முயற்சிக்காதீர்கள் என்று என்னுடைய தொண்டர்களிடம் நான் தெளிவாக கூறியிருக்கின்றேன்

Ttv Dhinakaran General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment