அமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்… வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

ஆண்டிபட்டியில் பணபட்டுவாடா செய்தவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படையினர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அமமுக தொண்டர்கள் அவர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் படிக்க – IT Raids Kanimozhi Residence: கனிமொழி வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு! இதுகுறித்து தேனி எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில், […]

Gun Fire by Police at andipatti ammk office - அமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்... வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!
Gun Fire by Police at andipatti ammk office – அமமுக அலுவலகத்தில் தடுக்கப்பட்ட போலீஸ்… வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு!

ஆண்டிபட்டியில் பணபட்டுவாடா செய்தவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்திருக்கும் அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பறக்கும் படையினர் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அமமுக தொண்டர்கள் அவர்கள் உள்ளே வரவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

மேலும் படிக்க – IT Raids Kanimozhi Residence: கனிமொழி வீட்டில் ஐடி அதிகாரிகள் ரெய்டு!

இதுகுறித்து தேனி எஸ்.பி. பாஸ்கரன் கூறுகையில், “ஆண்டிபட்டியில் காவலர்களை அமமுக கட்சியினர் தாக்க முயன்றதால் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம். இதில், யாருக்கும் காயமில்லை” என அவர் தெரிவித்தார்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Gun fire by police at andipatti ammk office

Next Story
IT Raids Kanimozhi Residence: ‘எதுவும் கைப்பற்றப்படவில்லை; தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்த சதி’ – கனிமொழிTamil nadu news in Tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com