திமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிகபட்சம் 50 தொகுதிகள் ஜெயிக்கலாம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு

How many seats for aiadmk dmk in Tamilnadu election Prashant Kishor opinion தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவு.

How many seats for aiadmk dmk in Tamilnadu election prashant kishor opinion Tamil News
How many seats for aiadmk dmk in Tamilnadu election Prashant Kishor opinion Tamil News

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் மே மாதம் 2-தேதி எண்ணப்படும் நிலையில், டி.எம்.சி கருத்துக் கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் Republic Media Network-ன் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியோடு தமிழ்நாடு தேர்தல் நிலவரம் பற்றிய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. டி.எம்.சி உள்ளிட்ட கட்சிகள் முஸ்லீம் சமூகத்தை வாக்குகளுக்காகவும், பிரதமர் மோடியின் புகழுக்காகவும் ஆதரவளிக்கிறார்கள் என கிஷோர் ஒப்புக் கொண்ட ‘கிளப்ஹவுஸ்’ சர்ச்சைக்கு மத்தியில் இந்த நேர்காணல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி என்று ஐந்து முனைப் போட்டியாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும், முன்பு எப்பொழுதும் இல்லாதவாறு இம்முறை ஐந்து முதன்மை முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் அதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவு.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை பாஜக 100 தொகுதிகளைத் தாண்ட முடியாது என்றும் ஒருவேளை தன்னுடைய கணிப்பு தவறும் பட்சத்தில் தேர்தல் உத்திவகுப்பாளர் என்கிற இந்தத் தொழிலை விட்டு விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தமிழ்நாடு தேர்தலைப் பொறுத்தவரைத் தேர்தலுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, திமுகவுக்கு எதிரான மொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து 50 தொகுதிகளைத் தாண்டாது. இப்படிக் கூறுவதானால் என்னை திமுக தலைமை என்று அவர்கள் கருதுகிறார்கள்” என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How many seats for aiadmk dmk in tamilnadu election prashant kishor opinion tamil news

Next Story
கூச்பெஹர் 4 பேர் மரணம், ஒரு இனப்படுகொலை: மம்தா பானர்ஜி ஆவேசம்Bengal poll violence, Mamata Banerjee, Mamata Banerjee blames CISF, மேற்கு வங்கம், மம்தா பானர்ஜி, 4 பேர் சுட்டுக்கொலை, சிஐஎஸ்எஃப், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல், cisf kills four people in Cooch Behar, mamata banerjee calls genocide four peopls killed, west bengal assembly elections 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express