How smaller parties played big spoilers in Tamil Nadu election : தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் 85% வாக்குகளை பெற்றுள்ளது. கூட்டணிக்கு வெளியே இருந்த சிறிய கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்ற போதிலும் பல்வேறு தொகுதிகளில்வாக்கு வங்கிகளில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது இந்த கட்சிகள்.
கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2.52% வாக்குகளை பெற்றது. தினகரனின் அமமுக கட்சி 2.35% வாக்குகளை பெற்றுள்ளது. இரண்டு கட்சிகளும் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அக்கட்சியின் தலைவர்களும் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் யார் என்பதை இக்கட்சிகள் பெற்ற வாக்குகள் உறுதி செய்தது.
தினகரனின் அமமுக கட்சி குறைந்த பட்சம் 20 தொகுதிகளின் வெற்றிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் நீதி மய்யம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பி டீம் என்று மற்ற கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டது. அதிமுகவை காட்டிலும் திமுகவிற்கு பல தொகுதிகளில் அச்சுறுத்தலாக அமைந்தது.
மற்றொரு சிறிய கட்சி பல்வேறு இடங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது தமிழ் தேசியவாதி சீமானின் நாம் தமிழர் கட்சி. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட கடந்த சட்டமன்ற தேர்தலைக் காட்டிலும் இம்முறை 1% வாக்குகள் கூடுதலாகவும், நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும் 4% கூடுதலாகும் பெற்று 6.58% வாக்குகளை பெற்றுள்ளாது. திமுக மற்றும் அதிமுகவின் கணக்கினை பல்வேறு இடங்களில் சோதித்தது இந்த கட்சி.
அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை பெற்ற அமமுக எவ்வாறு அதிமுகவின் வெற்றியை ஒற்றைப்படை இலக்கங்களில் தட்டி பறித்தது என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது. நெய்வேலியில் திமுக 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அமமுகவிற்கு 2230 வாக்குகள் கிடைத்தன. காட்பாடியில் திமுக 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமமுக 1066 வாக்குகள் பெற்றன.
2011ம் ஆண்டு பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி இம்முறை வெறும் 0.43% ஆக இருந்தது. விருதாச்சலம் தொகுதியில் மிகப்பெரிய ஸ்பாய்லராக அது இருந்தது. காங்கிரஸ் 862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேமுதிக 25,908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி பாஜக தலைவர் எச். ராஜாவை 21589 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. அங்கு அமமுக 44,864 வாக்குகளை பெற்றது. மயிலாடுதுறையில் காங்கிரஸ் 2742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போது தினகரனின் கட்சி 7282 வாக்குகள் பெற்றது. மன்னார்குடியில் திமுக 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அமமுக 40481 வாக்குகள் பெற்றது. அதிமுக 49,779 வாக்குகள் பெற்றது. திருப்போரூர், சங்கரன்கோவில், சாத்தூர் போன்ற தொகுதிகளில் அதிமுக தோல்விக்கு அமமுகவின் பங்கு அதிகமாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
2016ம் ஆண்டில் 40.88% வாக்குகளை பெற்ற அதிமுக கூட்டணி இம்முறை 39% வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 20 தொகுதிகளிலும் அதன் நிலையை மேம்படுத்தியிருக்கும். திமுக வெற்றி பெற்ற நிலையிலும் 2019 உடன் ஒப்பிடும்போது அதன் வாக்குப் வங்கி குறைந்திருப்பது கட்சியில் கவலையை ஏற்படுத்தும். 2019 மக்களவைத் தேர்தலில், 39 இடங்களில் 38 இடங்களை வென்றது, 52 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது இந்த முறை 45-46 சதவீதமாகக் குறைந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil