Tamil Nadu Assembly Election Updates: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் முடிந்ததுள்ள நிலையில், நேற்று முதல் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றனன். மேலும் வேட்மனுக்களை திரும்ப பெற மார்ச் 22ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 29 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர், மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
போக்சோ குற்றங்களில் சமரசங்களை ஏற்க முடியாது என சென்னை உய்ரநீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப், பேஸ்புக் சேவை திடீரென முடக்கம் செய்யப்பட்டது. 45 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் சேவை துவங்கப்பட்டது.
மகிழ்ச்சியாக வாழத் தகுந்த நாடுகள் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. 149 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் டென்மார்க்கு 2ம் இடமும், சுவிட்சலார்ந்துக்கு 3வது இடமும் கிடைத்துள்ளது. அந்த பட்டியலில் இந்தியா 139வது இடத்திலும், ஜிம்பாப்வே கடைசி இடத்திலும் உள்ளன.
சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 வது டி-20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு துவங்குகிறது. தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால் இன்று நடக்கும் போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
- 20:12 (IST) 20 Mar 2021எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று மேலும் 1243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது. மேலும் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷுக்கு கொரோனா தொற்று இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 20:07 (IST) 20 Mar 2021மராட்டிய முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அநத வகையில் தற்போது அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 19:57 (IST) 20 Mar 2021கொரோனா தடுப்பூசி கண்டு பயப்பட வேண்டாம் - திமுக தலைவர் ஸ்டாலின்
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக மக்களுக்க கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி கண்டு பயப்பட வேண்டாம். எனக்கும் பயம் ஏற்படுத்தீனார்கள், ஆனால் நான் அதனை பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
- 19:03 (IST) 20 Mar 20215-வது டி20: இங்கிலாந்து பவுலிங்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- 18:47 (IST) 20 Mar 2021தமிழத்தில் 2-வது நாளாக 1000-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்று பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது. இதில் தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 17:45 (IST) 20 Mar 2021பிரச்சாரத்தில் கமல்ஹாசனுக்கு காயம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு இன்றைய பிரச்சாரத்தின் போது காயம் ஏற்பட்டதால், பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
- 17:42 (IST) 20 Mar 2021விமுப்புரத்தில் முதல்வர் பிரச்சாரம்
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிச்சாமி, விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சி.வி. சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
- 16:52 (IST) 20 Mar 2021பிரேமலதா விஜயகாந்தின் வேட்பு மனு ஏற்பு
தமிழக சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
- 16:49 (IST) 20 Mar 2021பிரேமலதா விஜயகாந்தின் வேட்பு மனு ஏற்பு
தமிழக சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
- 16:09 (IST) 20 Mar 2021திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனு ஏற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 14:38 (IST) 20 Mar 2021மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
மார்ச் 22ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 14:14 (IST) 20 Mar 2021அதிமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்திவைப்பு
சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர் கந்தன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் தொகுதி குறிப்பிட வேண்டிய இடத்தில் வேட்பாளர் பெயர் பதிவானதால் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல்.
- 14:03 (IST) 20 Mar 2021அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்பு மனு நிறுத்திவைப்பு
திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்பு மனுவில் அரசு வழக்கறிஞர்கள் சான்று அளித்திருந்ததால் அமமுகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் அவருடைய வேட்பு மனு பரிசீலனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல, திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆதிராஜாராம் வழக்குகளை மறைத்ததாக அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால் அவருடைய வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 13:56 (IST) 20 Mar 2021தேர்தல் செலவின பார்வையாளருக்கு கொரோனா
அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர் தொகுதி தேர்தல் செலவின மேலிடப் பார்வையாளர் நரசிம்குமார் கால்கேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அருப்புக்கோட்டை பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
- 13:53 (IST) 20 Mar 2021சட்டப்பேரவை தேர்தல்: பிரதமர் மோடி மார்ச் 30ம் தேதி புதுச்சேரி வருகை
சட்டப்பேரவை தேர்தல்: பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி புதுச்சேரி வருகை தர உள்ளார். புதுச்சேரி, ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
- 13:51 (IST) 20 Mar 2021மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவத்தில், வேட்பு மனுவை பூர்த்தி செய்ததால் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
- 12:53 (IST) 20 Mar 2021திருவொற்றியூர் தொகுதியில் சீமான் வேட்பு மனு ஏற்பு
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிப்பு
- 12:51 (IST) 20 Mar 2021திருவள்ளூரில் இரும்பு கம்பி தயாரிப்பு ஆலை தொழிலாளர்கள் 19 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் இரும்பு கம்பி தயாரிப்பு ஆலையில் 19 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்காக ஆலை நிர்வாகம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியது. ஆலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்க திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- 12:43 (IST) 20 Mar 2021ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வேட்புமனு ஏற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமியின் வேட்பு மனு, போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:39 (IST) 20 Mar 2021கோவை தெற்கு தொகுதியில் மநிம தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 12:37 (IST) 20 Mar 2021மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீப்ரியா வேட்பு மனு ஏற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவின் வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 12:36 (IST) 20 Mar 2021நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் வேட்பு மனு நிராகரிப்பு
நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர், அமமுக மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
- 12:31 (IST) 20 Mar 2021கமல்ஹாசன் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை
கோவையில் நடைபயிற்சியின்போது கமல்ஹாசனுடன் செல்ஃபி எடுக்க மக்கள் கூட்டமாக குவிந்தனர். கூட்டத்தில் ஒருவர் கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் மீதித்ததால் கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கமல்ஹாசன் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 12:28 (IST) 20 Mar 2021‘ஒரு விவசாயி முதல்வராக வந்திருக்கிறார்... அவரது ஆட்சி தொடர வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்
பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், “70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதல்வராக வந்திருக்கிறார்...அவரது ஆட்சி தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- 12:25 (IST) 20 Mar 2021அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 11:24 (IST) 20 Mar 2021அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை கோரி வழக்கு
அமைச்சர்கள்,எதிர்கட்சி தலைவர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு சம்பளம் பெறுவதால் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- 11:21 (IST) 20 Mar 2021வேட்பாளர்களின் வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
- 11:20 (IST) 20 Mar 2021ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் வேட்பு மனு ஏற்பு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக குஷ்பு தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- 11:13 (IST) 20 Mar 2021இந்தியாவிலேயே அதிக விருதுகளை வென்றுள்ள மாநிலம் தமிழகம் - முதல்வர் பழனிசாமி பெருமிதம்
கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி, “அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் - கள்ளக்குறிச்சி எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக விருதுகளை வென்றுள்ள மாநில தமிழகம்” என்று கூறினார்.
- 09:38 (IST) 20 Mar 2021கொரோனா பரவல்- தஞ்சாவூரில் ஒரு பள்ளி மீது வழக்கு பதிவு
தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அந்த பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பள்ளிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.