Pooja Prakash Raj Exclusive: பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, பா.ஜ.க அரசுக்கு நிறைய கேள்விகளை எழுப்பி வந்தார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே பிரகாஷ்ராஜின் மகள் பூஜா பிரகாஷ்ராஜை சந்தித்தோம்.
“எங்கப்பா 3 வருஷமா ஜஸ்ட் ஆஸ்கிங் மூவ்மெண்ட முன்னெடுத்துட்டு வந்தாரு. 2019 புது வருஷத்துல நைட் 12 மணிக்கு வாழ்த்து சொல்லும் போது, எங்கப்பா தேர்தல்ல நிக்க போற விஷயத்தை எங்கக்கிட்ட சொன்னாரு.
எங்களுக்கு அது சர்ப்ரைஸ் இல்ல. ஏன்னா அது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அந்தத் தருணத்துல அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.
ஒரு பக்கம் யாராச்சும் எதுவும் சொல்வாங்களா, எதிர்ப்பு வருமான்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா எங்கப்பாவோட தைரியத்துக்கு முன்னாடி அந்த பயம் எல்லாம் தவிடு பொடியாகிடுச்சி.
ஒரு விஷயம் தப்புன்னா அது அரசா இருந்தாலும் யாரா இருந்தாலும் எதிர்த்துக் குரல் கொடுக்குற எங்கப்பாவோட தைரியம் எங்கக் குடும்பத்துக்கே பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு.
ஆர்டிஸ்டா இருந்தாலும் அவங்களுக்கும் மக்கள் தான் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க. அதே மாதிரி மக்களுக்கு திரை / நிஜ வாழ்க்கையில் என்ன வேணும்ங்கறத ஆர்டிஸ்ட் யோசிக்கிறாங்க.
அப்படித்தான் ரஜினி சார், கமல் சார், எங்கப்பா எல்லாரும் மக்களுக்கு எதாவது செய்யணும்ன்னு நினைக்கிறாங்க” எனும் பூஜாவின் தமிழில் தான் அத்தனை தெளிவு.