சினிமாவில் வில்லனாக மிரட்டிய பிரகாஷ் ராஜ் அரசியலுக்கு வருவார் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அதுவும், இந்திய பிரதமரை எதிர்த்தி மிகக் கடுமையாக கேள்விகளை எழுப்பி, துணிச்சலாக அதற்கான எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக, பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்குப் பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கேள்விகளால் துளைத்து வருகிறார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள பிரகாஷ் ராஜ், ஓட்டின் முக்கியத்துவம் குறித்து நமது இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி இது…
“வணக்கம் செல்லம்.. நான் பிரகாஷ் ராஜ் பேசுறேன். ஓட்டு போடணும். ஓட்டு உங்களின் மொழி. நீங்க நினைப்பதை சொல்வதற்கான உங்கள் குரல். உங்களுடைய உரிமை. தயவுசெய்து, யாரு எந்த கட்சி என்பதெல்லாம் முக்கியம் அல்ல. உங்கள் தொகுதியில் உங்கள் பிரச்னையை தெரிந்தவன் யாரோ, உங்களுக்கு தெரிந்தவன் யாரோ அந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க. உங்கள் தொகுதியில எவனுமே சரி இல்லனா, பூத்-க்கு போய் நோட்டாவுக்காவது ஓட்டு போடுங்க. ஏனெனில், உங்கள் ஓட்டு பேசணும்” என்று தெரிவித்துள்ளார்.