In uphill Kerala, BJP hopes to pull off a Capital surprise : பாஜக மற்றும் அதன் சித்தாந்தங்களை கொண்டிருக்கும் கட்சிகளுக்கு எப்போதுமே திருவனந்தபுரம் ஒரு சோதனை களமாக இருக்கிறது.
1984ம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த பி. கேரள வர்ம ராஜா நாடாளுமன்ற தேர்தலில் இந்து முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்ட போது, மொத்த இந்து வாக்குகளும் கேரள மாநில அரசியலை அசைத்து பார்த்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் முஸ்லீம் லீக் கட்சியை இடதுசாரி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வழி வகுத்தது. இருப்பினும் வர்மா அந்த தேர்தலில் மூன்றாம் இடமே பிடித்தார்.
பல ஆண்டுகள் கழித்து, இன்றும் ராஜகுடும்பத்தின் பார்வையை பெற்றிருக்கும் பாஜக மீண்டும் அதே மாவட்டத்தில் புத்துயிர் பெற்றது. 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது சி.பி.எம். தலைமை வகிக்கும் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முன்னணி கட்சிக்கு அதிர்ச்சி அளித்தார் ஓ. ராஜகோபால். சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட அவர் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றுகளில் முன்னணி பெற்றார். 7 வருடங்கள் கழித்து பாஜகவிற்கு கேரளத்தில் வழி வகுத்து கொடுத்தது திருவனந்தபுரத்தின் நேமோம் தொகுதி.
14 சட்டமன்ற தொகுதிகளை கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தில் பாஜகவினர் நான்கு தொகுதிகளில் கடுமையான போட்டியை சந்திக்கின்றனர். நேமோம் (கும்மனம் ராஜசேகரன்), மாநில பொதுசெயலாளர் சோபா சுரேந்திரன் (கழக்கூட்டம்), நடிகர் கிருஷ்ண குமார் (திருவனந்தபுரம் நகர்), மூத்த தலைவர் வி.வி. ராஜேஷ் (வட்டியூர்க்காவு). அதே போன்று காட்டக்கடாவில் கிருஷ்ணதாஸூம், மாநில செயலாளர் சிவன்குட்டி அருவிக்கரா பகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
நேமோமில் பெரும்பான்மையினர் வாக்கு உயர்சாதி இந்துக்களுடையது. பாஜக ஆதரவாளரும், தொழிலதிபருமான பி. மனோஜ் இது குறித்து பேசிய போது, இது திருவனந்தபுரத்தில் பினராயி விஜயனா அல்லது மோடியா என்பது தான். இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக இடதுசாரி மற்றும் ஐக்கிய முன்னணியினருக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். கழக்கூட்டம் மற்றும் நேமோமில் என்.டி.ஏ. நேரடியாக இடதுசாரியை எதிர்கொள்கிறது.
முன்பு அமைதியான பாஜக வாக்காளர்கள் என்று கூறப்பட்டவர்கள் தற்போது வெளிப்படையாக தங்களை பாஜக வாக்காளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
திருவனந்தபுரத்தில் பாஜகவின் வாக்கு வங்கி 16%க்கு கீழ் எப்போதும் குறைந்ததே இல்லை. ஆனால் 2014 மற்றும் 2019 ஆண்டுகள் நாடாளுமன்ற தேர்தல்களில் இரண்டாம் இடம் பிடித்தது. கழக்கூட்டத்தில் பாஜகவின் சோபாவும், சி.பி.எம்.மின் கடகம்பள்ளி சுரேந்திரனும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர். தெருக்களில் பெரிய பெரிய பதாகைகளும், விளம்பர பலகைகளும் இடம் பெற்றுள்ளது.
சபரிமலை விவகாரத்திற்கு பிறகு மதநம்பிக்கையை காக்க வந்தவர்கள் என்று பாஜக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயலும் இடமும் திருவனந்தபுரமாகும். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சிக்கு வீழ்ச்சியாக அமைந்த இந்த விவகாரத்தில் யூ.டி.எஃப். மற்றும் என்.டி.ஏ மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.
“சபரிமலை பிரச்சினை எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் பாஜகவுடன் இருக்கிறோம், ”என்கிறார் கழக்கூட்டத்தில் மளிகை பொருட்களை விற்கும் பேபி சரோஜா. இடதுசாரி கட்சி வேட்பாளார் சிவன்குட்டி, சபரிமலை விவகாரத்தில் மாநில அரசுக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என்று நேமோமில் கூறி வருகிறார். காங்கிரஸிற்கு பாஜகவின் வாக்குகள் தேவைப்பட்டது என்றால் இது குறித்து அவர்கள் குரல் கொடுத்தனர் என்று ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.