Indian general election 2019 : பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் இன்று (11.4.19)வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.
மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஆந்திரா 25, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பிஹார் 4, சத் தீஸ்கர் 1, ஜம்மு காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகாலயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலங்கானா 17, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை எதிர்கொள்கின்றன.
மேலும் படிக்க.. நம் வாக்கு நமது உரிமை”-அழகான கிராஃபிட்டிகள் மூலம் ஆழமான விழிப்புணர்வு!
Lok Sabha Election Phase 1 Polling:
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் 4 மாநிலங்களில் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகியவை இன்று ஒரே கட்ட தேர்தலை சந்திக்கின்றன. மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் 28 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
Live Blog
நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
A bridegroom casts his vote at a polling station in Bijnor. #IndiaElections2019 pic.twitter.com/7gHghhTqLX
— ANI UP (@ANINewsUP) April 11, 2019
Maharashtra: World's smallest living woman, Jyoti Amge, casts her vote at a polling station in Nagpur. #IndiaElections2019 pic.twitter.com/QsLiaHMGMx
— ANI (@ANI) 11 April 2019
உலகிலேயே குள்ளமான பெண் என அழைக்கப்படும் ஜோதி தனது வாக்கினை நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.
Raebareli: Sonia Gandhi holds a roadshow ahead of filing nomination from Raebareli. #IndiaElections2019 pic.twitter.com/nIg1Ym2Gri
— ANI UP (@ANINewsUP) 11 April 2019
ஹைதராபாத் அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கணவர் நாக சைதன்யாவுடன் சென்று நடிகை சமந்தா ஓட்டு போட்டார்.Hyderabad: Tollywood actors Naga Chaitanya and Samantha arrive at a polling station in Nanakramguda, Gachibowli to cast their vote for #IndiaElections2019 pic.twitter.com/oFLiit6CTj— ANI (@ANI) 11 April 2019
ஆந்திரா- தெலுங்குதேசம் - ஒய்எஸ்ஆர் காங். கட்சியினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் ஆந்திராவில் வாக்குசாவடிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
#WATCH: Clash broke out between YSRCP and TDP workers in Puthalapattu Constituency in Bandarlapalli, Andhra Pradesh. Police resorted to lathi-charge pic.twitter.com/q7vxRIR0R8
— ANI (@ANI) 11 April 2019
ஆந்திராவில் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும், என்.டி. ஆரின் பேரனுமாகிய ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில் நின்று வாக்களித்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.ஜூனியர் என்டிஆர் வரிசையில் நின்று வாக்களித்த காட்சி...| #ElectionsWithPT | #SeeEverySide pic.twitter.com/hnlcgmkEFg— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 11 April 2019
அமராவதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்தார் ஆந்திரா முதல்வர் சந்திரப்பாபு நாயுடு.
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu and his family after casting their vote for #LokSabhaElections2019 in Amravati. pic.twitter.com/QzlYYfNzjd
— ANI (@ANI) 11 April 2019
நாக்பூரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
Maharashtra: Union Minister Nitin Gadkari cast his vote at polling booth number 220 in Nagpur parliamentary constituency #LokSabhaElections2019 pic.twitter.com/hSrlIySwUV
— ANI (@ANI) 11 April 2019
வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, விவசாயிகளின் வலி, ஜிஎஸ்டி வரி, ரஃபேல் ஊழல் ஆகிய அனைத்தையும் மனதில் வைத்து நம் நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து வாக்களியுங்கள் என்று ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
No 2 Crore JOBS.
No 15 Lakhs in Bank A/C.
No ACCHE DIN.Instead:
No JOBS.
DEMONETISATION.
Farmers in Pain.
GABBAR SINGH TAX.
Suit Boot Sarkar.
RAFALE.
Lies. Lies. Lies.
Distrust. Violence. HATE. Fear.You vote today for the soul of India. For her future.
Vote wisely. pic.twitter.com/wKNTBuGA7J
— Rahul Gandhi (@RahulGandhi) 11 April 2019
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அச்சமில்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இன்று காலை அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
YSR Congress Party Chief Jagan Mohan Reddy after casting his votes in Kadapa: I'm very confident, people are looking for a change, vote without fear. #AndhraPradeshElection2019 #LokSabhaElections2019 pic.twitter.com/jitKKO8VWK
— ANI (@ANI) 11 April 2019
அதிக எண்ணிக்கையில் வாக்களித்து சாதனைப் படைக்க பிரதமர் வேண்டுகோள் வாக்களார்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
2019 Lok Sabha elections commence today.
I call upon all those whose constituencies are voting in the first phase today to turn out in record numbers and exercise their franchise.
I specially urge young and first-time voters to vote in large numbers.
— Chowkidar Narendra Modi (@narendramodi) 11 April 2019
91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
வாக்கு பதிவு நடைபெற உள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிகளைச் சுற்றி போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights