Bashaarat Masood, Arun Sharma
Jammu Kashmir Block Development Council 2019 elections : ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரித்து அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன நிலையில் அங்கு வட்டார வளர்ச்சி கவுன்சில் Block Development Council (BDC) தேர்தல்கள் 24ம் தேதி நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் 280 வட்டாரங்களில் வெறும் 81 வட்டாரங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பெரிய கட்சியும் இது மட்டுமே. தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இக்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதை எதிர்த்தும், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அக்கட்சியினர்.
பாஜகவின் பலம் பொருந்திய இடமாக பார்க்கப்பட்ட ஜம்முவில் 148-ல் 52 வட்டாரங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது அக்கட்சி. பேந்தர்ஸ் கட்சி 8 இடங்களிலும் மீதம் இருந்த 88 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஜம்முவில் இருக்கும் 37 சட்டமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜக 2014ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 137 இடங்களில் 18 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேந்திர குமார் வியாழக்கிழமையன்று தேர்தல் முடிவுகளை அறிவித்தார். மொத்தம் 316 இடங்களில் 307 இடங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதில் 27 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானதால் 280 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 81 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 8 இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் வென்றது. மீதம் இருந்த 217 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர்.
பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள் என அனைவரும் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்களில் வைத்து அழைத்து வரப்பட்டனர். 26 பஞ்சாயத்து தலைவர்கள் தங்களின் வாக்குகளை நேற்று பதிவு செய்தனர், 98% மேலான வாக்குகள் நேற்று பதிவாகியுள்ளது. கக்கபோரா பகுதியில் தேர்தல் துவங்கி ஒன்றரை மணி நேரம் ஆன பின்பு வெறும் 9 வாக்காளர்களே தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அவர்கள் காஷ்மீரி பண்டிட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது நாள் வரையில் ஜம்முவில் வாழ்ந்து வந்த மனோஜ் பண்டிட் சமீபத்தில் தான் காஷ்மீரில் குடியேறினார். என் கிராமத்தின் வளர்ச்சிக்காக நான் இங்கு போட்டியிட்டேன். 1960ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் முதற்கொண்டு எதுவுமே மாறவில்லை என்று கூறிய அவர் சுயேட்சை வேட்பாளர் உமர் ஜானிடம் தோல்வியுற்றார். பாஜக சார்பில் இவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இவர் புல்வாமா பகுதியில் இருக்கும் லஜூரா கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக கட்சியின் கீழ் போட்டியிட பலரும் தயங்குவதால் அவர்களை சுயேட்சையாக போட்டியிட அனுமதித்தோம் என்றும் அஷாம் அப்துல் ரஷித் கான் தெரிவித்தார். மத்திய காஷ்மீரில் அமைந்திருக்கும் பட்காமின் பகத் கனிபோரா வட்டாரத்தில் பாஜகவின் ருஹூனா ஜான் தேர்வு செய்யப்பட்டார். கத்துவாவில் அமைந்திருக்கும் 19 வட்டாரங்களில் 9களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மீதம் இருந்த 10 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர்.
உதம்பூரின் 17 ப்ளாக்குகளில் 4ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. சம்பாவின் விஜய்பூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்திருக்கும் 3 இடங்களில் ஒன்றைக்கூட பாஜகவால் தக்கவைக்க இயலவில்லை. ரயிஸியின் 12 இடங்களில் பாஜக 4-ஐ மட்டுமே வென்றது. ரம்பானின் 9 இடங்களில் இரண்டில் மட்டுமே பாஜக வெற்றி. தோடாவில் 5 இடங்களிலும், கிஷ்த்வாரின் 13ல் 7 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
மேலும் படிக்க : 2 மாநில தேர்தல் முடிவுகள் : ராகுல் பொறுப்பில் இருந்து விலக, தேர்தலில் அசத்திய காங்கிரஸ்…!