ஜெ., அழகிரி, சசிகலா: மனம் திறக்கும் அமைச்சர் உதயகுமார்

உங்களுக்கு வாய்ப்பளித்தால் வெற்றி பெறுவீர்களா என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டார். உங்களின் பெயரில் நான் பிரச்சாரம் மேற்கொண்டால் அண்டார்டிகாவிலும் வெற்றி பெறுவேன் என்றேன்

 Arun Janardhanan 

Jaya, Alagiri, Sasikala: the long run of Udhayakumar : தமிழகத் தேர்தலில் அதிமுக – திமுக போட்டி கடுமையாக இருக்கின்ற நிலையில் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ள அமைச்சர்கள் பட்டியலில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் உள்ளார். ஒரு காலத்தில் தீவிரமான ஜெயலலிதா விசுவாசியாக இருந்தவர். ஜெவிற்கு முன்பு காலணிகளை அணிய மறுத்துவர். திமுக தலைவர் முக அழகிரி மதுரையில் கோலோச்சி இருந்த காலத்தில் அதிமுக கொடியை வெகு காலத்திற்கு மதுரையில் பறக்க விட்டவர் உதயகுமார். தன்னுடைய தொகுதியான திருமங்கலத்திற்கு அவர் செய்திருக்கும் மேம்பாட்டு திட்டங்கள் அவரை புகழ் அடைய செய்துள்ளது.

திங்கள் கிழமை இரவு 11 மணிக்கு மேல் தன்னுடைய பிரச்சாரத்தை முடிக்க அவசரப்படாத உதயகுமார் அங்கிருக்கும் அம்மா கோவில் வளாகத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். இந்த கோவிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு வெண்கல சிலைகளை கட்டியுள்ளார் உதயகுமார். உதயகுமாரின் குழுவில் அவருடைய மகள் ப்ரியதர்ஷினியும் அடங்குவார். இந்த பகுதியில் 1000 டியூசன் செண்டர்கள் உட்பட செய்யப்பட்டிருக்கும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை சாத்தியமாக்கிய உதயகுமாரின் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக அவர் இருக்கிறார்.

மூத்த அதிமுக அமைச்சரான இவர் தன்னுடைய சீட்டை தக்க வைத்துக் கொள்வதுடன் நிச்சயமாக எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். “அவர் தனது பிரச்சாரத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அவர் இப்போது ஒவ்வொரு வாக்காளரையும் பலமுறை சந்தித்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

தொகுதியின் 2.76 லட்சம் வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்று சொல்வது மிகையாகாது என்று கூறும் உதயகுமார் 324 கிராமங்களில் உள்ள யாரிடமும் சென்று கேளுங்கள் இது உண்மை என்று தெரியும் என்றார். “தாலிக்கு தங்கம், முதியோர் ஓய்வூதியம், கோவிட் பண நிவாரணம் என அனைத்தும் 1.10 லட்சம் குடும்பங்களும் சென்றடைந்ததை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்திருக்கிறேன்”

திருமங்கலத்தில் வசிக்கும் ரமேஷ் (35) என்ற பாதுகாப்பு காவலர், அழகிரி இம்முறை போட்டியிடாததால் உதயக்குமாருக்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். 2009ம் ஆண்டு திருமங்கலம் சூத்திரம் எனப்படும் ஓட்டிற்கு பணம் என்ற சர்ச்சை அழகிரி வகுத்தது. அது வாக்காளர்களை விலைக்கு வாங்கியது.

ஆனால் ஜெயலலிதா மீது உதயகுமார் வைத்திருக்கும் பக்தி அவரை அழகிரி மற்றும் அவருடைய பணியில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது. ”நான் அதிமுகவில் 1984ம் ஆண்டு பூத் ஏஜென்ட்டாக அரசியல் வாழ்க்கையை துவங்கினேன். என்னுடைய பணிகளை பார்த்த பிறகு எனக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா. மதுரையில் அழகிரி மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தபோதும், ஜெயலலிதாவிற்காக நான் பெரிய வரவேற்புகளை ஏற்பாடு செய்வேன் என்றார்.

உங்களுக்கு வாய்ப்பளித்தால் வெற்றி பெறுவீர்களா என்று ஜெயலலிதா என்னிடம் கேட்டார். எனக்கு பயம் இல்லை. உங்களின் பெயரில் நான் பிரச்சாரம் மேற்கொண்டால் அண்டார்டிகாவிலும் வெற்றி பெறுவேன் என்று ஜெயலலிதாவிடம் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவை தெய்வமாக கருதியதால் அவர் தலைமைச் செயலகத்திற்கு செல்லும் போது செருப்புகள் அணியாமலே செல்வார். ”ஒரு நாள் அவர் என்னை அழைத்து இது தேவையற்றது. நாளை முதல் செருப்புகள் அணிந்து வாருங்கள்” என்று ஜெயலலிதா கூறியதை நினைவு கூறுகிறார்.

ஒரு சமயத்தில் அமைச்சரவையில் இருந்து அவரை வெளியேற்றினார் ஜெயலலிதா. அவர் வருகையின் போது 8 கி.மீ தொலைவிற்கு ட்யூப்லைட் வைத்ததை தொடர்ந்து ஜெயலலிதா அவர் மீது பயங்கர கோபமுற்றார். தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவி வந்த காலத்தில் உதயகுமாரின் நடவடிக்கையால் பெரிதும் கோபம் அடைந்த ஜெயலலிதாவிடம், அம்மா ஒரு தெய்வம். என் தெய்வம் இருளில் செல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. அனைத்து விளக்குகளும் ஜெனரேட்டர்களால் இயக்கப்படுபவை. மின்சாரம் அல்ல என்று கூறினார். மீண்டும் இது தொடர்பாக ஜெயலிதாவிடம் பேசிய போது அதே வாதத்தை முன் வைக்க மூன்று நாட்களில் ஐ.டி. அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் உதயகுமார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

கைகளைக் கட்டி ஜெயலலிதாவை வரவேற்க, அவர் காரின் வருகைக்காக காத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதிமுகவில் கைவிடப்பட்டவர்கள் எவ்வளவு காலம் அந்த கட்சியில் இருப்பார்கள் என்று தெரியாது. அதே நேரத்தில் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியும் கைவிடப்பட்டவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்பி எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று. அம்மா உயிருடன் இருக்கும் வரை எதுவும் நிரந்திரமில்லை என்று கூறிய உதயகுமார் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

இப்போது வித்தியாசமாக இருப்பது என்ன என்று கேட்ட போது, ஒவ்வொரு விசயத்திற்கும் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை. ஆனால் நடவடிக்கைகள் ஏதாவது தவறாக போனால் தண்டனைகள் கடுமையாக இருக்கும். தற்போது நாங்கள் அனைத்தையும் முதல்வரிடம் கேட்டு தான் முடிவெடுப்போம். ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அது மன்னிக்கப்படுகிறது என்று சிரித்தபடி பதில் கூறுகிறார்.

பழனிசாமி திறமை மிக்க முதல்வராக நிரூபித்திருக்கிறாரா என்று கேட்ட போது, ஜெயலலிதா செய்ய விரும்பிய அனைத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். நாங்கள் அவரை ஜெவின் இடத்தில் இருந்து காண்கின்றோம். அவர் தான் தற்போது அம்மா.

இருப்பினும் ஒரே ஒரு விசயம் மட்டும் வரம்பிற்குட்பட்டுள்ளது. சசிகலா; ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய, அதிமுகவால் வெளியேற்றப்பட்ட சசிகலா குறித்து கேட்ட போது கருத்து ஏதும் இல்லை என்று கூறினார் உதயகுமார்.

பாஜகவுடன் கூட்டணி உட்பட்ட, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகான கட்சியின் முடிவுகளுக்கு ஆதரவாகவே அவர் பேசுகிறார். அம்மாவின் மறைவிற்கு பிறகு எங்களுக்கு ஒரு தலைவர் தேவைப்பட்டார். இந்த நேரத்தில் பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்வது மட்டும் தான் ஒரே வழியாக இருந்தது. ஏன் என்றால் கட்சியை காப்பாற்றுவது, ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது, மற்றும் தொடர்ந்து மக்களை வழிநடத்துவது ஆகியவை தான் முன்னுரிமையாக அப்போது இருந்தது என்றார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jaya alagiri sasikala the long run of udhayakumar

Next Story
ஹெலிகாப்டரில் பறந்து வாக்கு வேட்டை… ‘நடமாடும் நகைக்கடை’யை வியந்து பார்க்கும் அரசியல் கட்சிகள்Tamilnadu assembly election 2021: Hari Nadar election campaign in helicopter Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com