2019ம் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு கமல்ஹாசன் நன்றி கூறி பதிலளித்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ரஜினிக்கு கமல்ஹாசன் நன்றி
அதேநேரம், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என ரஜினியும் கூறிவிட்டார். மேலும், ரஜினியின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என நம்புவதாகவும் சமீபத்தில் கமல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலை சந்திக்கவுள்ள கமல்ஹாசனுக்கு ரஜினி வாழ்த்து கூறியுள்ளார்.
February 2019
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல் ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…” என ரஜினி பதிவிட்டுள்ளார்.
February 2019
இதற்கு நன்றி கூறியுள்ள கமல், “நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே.” என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.