Kamal Haasan vs star in her own right: a popular Tamil Nadu BJP leader : தமிழகத்தில் பிரபல பாஜக தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று நம்பப்பட்ட நிலையில் தான் களத்திற்கு வந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன். ஆரம்பத்தில் சென்னை ஆலந்தூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் ஹாசன் கோவையில் போட்டியிட்டார்.
2019ம் ஆண்டு அதே தொகுதியில், நாடாளுமன்ற தேர்தலின் போது 1 லட்சம் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசன் அவருடைய நட்சத்திர மதிப்பைக் கருத்தில் கொண்டால், பாஜக மஹிலா மோர்ச்சாவின் தேசியத் தலைவர் வானதி இப்பகுதியில் தனது பணிகள் மூலம் வெற்றி வாய்ப்பினை எதிர்பார்த்து வருகிறார். திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறார்.
பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர குடும்பங்களைக் கொண்ட ஒரு தொகுதியான கோயம்புத்தூர் தெற்கில் பாஜக ஆதரவாளர்களாகக் காணப்படும் வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 12% உயர் சாதி இந்து வாக்காளர்கள் உள்ளனர். 10% க்கும் அதிகமான வாக்காளர்கள் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வானதி அவரது மிதமான பிம்பம் காரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
வானதி “மக்கள் நீதி மய்யம் 2019ம் ஆண்டு இங்கு நல்ல வாக்குகளை பெற்றது. ஏன் என்றால் அன்றைய வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மகேந்திரன் உள்ளூர்க்காரர். செட்டியார் பிரிவை சார்ந்தவர். அவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் அவர் நிறைய வாக்குகளை பெற்றார். மேலும் அவர் இங்கு பல்வேறு முக்கியமான வேலைகளை முன்னெடுத்து நின்று செய்தார். அதுவும் இல்லாமல் அன்று திமுகவிற்கு ஆதரவான மனநிலைமை இருந்தது. இன்று அப்படி ஒரு அலை பரவவில்லை. பாஜகவின் பிம்பம் உயர்ந்துள்ளது. அனைவருக்கும் தெரிந்த தலைவராக இருக்கும் நான் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் இந்த மக்களுக்கு வந்தடைவதை உறுதி செய்தேன் என்றார்.
பணமதிப்பிழக்க நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியை தற்போது நாங்கள் குறைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அனைத்து புகார்களும் பெறப்பட்டு தொழிற்சாலைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த மாநிலத்திலேயே மிகவும் துடிப்பான அலுவலகம் வானதியுடைய அலுவலகம் தான். இரண்டு மாடிகள் கொண்ட அலுவலகத்தின் வெளியே மக்கள் கூட்டங்கள், இளைஞர்கள், சங் பரிவார் உறுப்பினர்காள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். 80 வயதுமிக்க ஒருவர் வானதியை பார்க்க சேலத்தில் இருந்து வந்திருப்பதாக கூறினார்.
ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட வானதிக்கு அரசியல் என்பது ஒரு சாத்தியமற்ற பாதையாகும். அவரது குடும்பத்தின் ஒரே அரசியல் தொடர்பு அவரது தந்தை விவசாயிகள் கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டது தான். தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் தான் அவர் மனதில் தேசியத்தை விதைத்தனர். எங்கள் கல்லூரியில் ஏ.பி.வி.பி அமைப்பு நடத்திய விவேகானந்தா வாசகர் வட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தேன் என்று அவர் கூறினார்.
2011 மற்றும் 2016 ஆண்டுகளில் முறையே மயிலாப்பூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். காஃபி வித் வானதி என்ற பிரச்சாரத்தின் மூலமாக மக்களின் மனதை அவர் கவர்ந்துள்ளார். அதிமுக கூட்டணியில் இருப்பதை அவர் கூடுதல் பலமாக கருதுகிறார். அதிமுக, பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில் வானதியின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் பெயரை தக்ஷின் பாரத் என்று மாற்ற இருப்பதாக கூறினார்கள். அது தொடர்பாக கேட்ட போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
ஒரு பெண் தலைவராக அவருடைய போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் உள்ளூர் பாஜக தலைவர்கள் அவருடைய பிரச்சாரத்தில் அலட்சியமாக இருப்பதாக கூறுகின்றனர். அனைத்து இடங்களிலும் பெண் அரசியல் தலைவர்கள் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆனால் நான் அதை ஒரு குடும்பத்தின் நல்ல மற்றும் கெட்ட கருத்துகளின் கலவையாக பார்க்கின்றேன். நான் மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம் காட்டுகிறேன் என்றார். இது தவிர அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவரின் பின்னணியில் இருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.