”மேகங்கள் சூழ்ந்து வருகின்றன… விரைவில் நல்மழை பெய்யும்” – மக்கள் நீதி மய்யத்தின் கனவு என்ன ஆனது?

மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்றவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். அவர்கள் வதந்தி என்று சொல்கிறார்கள். இல்லை என்கிறேன் நான்.

Kamal Haasans MNM to fight in 154 seats rest for 2 allies : தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டியாக இருக்குமா அல்லது பல்முனை போட்டியாக இருக்குமா என்ற சந்தேகத்துடன் கட்சிகள் தங்களின் கூட்டணிகளை வலுப்படுத்தி களத்தில் இறங்க உள்ளனர். அதிமுகவினர் தங்களின் கூட்டணிக்கட்சிகளை உறுதி செய்து, தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தங்களின் தொகுதி பங்கீட்டினை முடித்து, ஆட்சிகாலத்தில் செய்யப் போகும் மாற்றங்கள் குறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை உறுதி செய்துள்ளனர்.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் கூட்டணியை உறுதி செய்தது. தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு நேற்று இரவு எட்டப்பட்டது. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளிலும், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

மேலும் படிக்க : சட்டமன்ற தேர்தல் 2021 : இது தேமுதிகவின் அரசியல் வரலாறு!

மேகங்கள் சூழ்ந்து வருகின்றன…. விரைவில் நல்மழை பெய்யும்

கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாடிய கமல்ஹாசன், நாங்கள் ஒரு புதிய கட்சி. வெற்றியை நோக்கி நடைபோடுகின்றோம். நாங்கள் அமமுக வந்தால் வரவேற்க தயாராக இருக்கின்றோம். கதவுகள் திறந்திருக்கின்றன என்று தன்னுடைய எதிர்பார்ப்பினை கூறியிருந்தார் கமல். தாங்களாக முன்னே சென்றே அழைப்பு விடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திய அவர், டிடி தினகரன் கூட்டணியில் இணைந்தால் உடனே சொல்வேன் என்றும் அப்போது கூறினார். ஆனால் தற்போது அவர் எதிர்பார்த்த எந்த பெரிய கட்சியினரும் அவருடன் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோஃபாவில் அமர்ந்து பேசலாம்!

வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டை மீட்ட அவர்கள் இன்று கொள்ளைக்காரர்களுக்கு “வாட்ச்மென்னாக” நிற்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்றவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். அவர்கள் வதந்தி என்று சொல்கிறார்கள். இல்லை என்கிறேன் நான். வதந்தி என்று அவர்கள் சொல்வது அங்கே கிடைக்கும் சீட்டிற்காக தான். மக்கள் நலன் என்பது இருவர்களிடம் சீட்டு வாங்கிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது? இந்த பக்கமும் 6 சீட்டு, அந்த பக்கமும் 6 சீட்டு. 100 வருட கட்சி, நீங்கள் சோஃபாவில் அமர்ந்து பேசலாம் என்றால், தவழ்ந்தது தான் செல்வேன் என்கிறிர்கள்” என்று காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது குறித்து கமல் ஹாசன் மார்ச் மாதம் 07ம் தேதி, துறைமுகத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Web Title: Kamal haasans mnm to fight in 154 seats rest for 2 allies

Next Story
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com