நாகர்கோவில்: வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக வாக்குவாதம்

காவல்துறையினர் பாஜக முகவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிப்பதற்கு தயாரான நிலையில், திடீரென அவர்கள் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Assembly Election Results News : நாகர்கோவில் மக்களைவை தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, கட்சிகளின் முகவர்களுக்கு கொரோனா நெகாட்டிவ் சான்றிதழ்களை காவல்துறையினர் சரி பார்த்து அவர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினர்.

அப்போது, கூட்டமாக வந்த பாஜக முகவர்களிடம் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை காவல் துறையினர் கேட்டுள்ளனர். அப்போது, கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகளை வந்ததை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து, முகவர்களுக்கான அடையாள அட்டையில் அது குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏதற்காக கொரோனா சான்றிதழ் கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, காவல்துறையினர் பாஜக முகவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிப்பதற்கு தயாரான நிலையில், திடீரென அவர்கள் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடங்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சமாதானப்படுத்தியப் பின், கலைந்து சென்றனர்.

பாஜக வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kanyakumari bjp agents fight police corona negative certificate

Next Story
ஓபிஎஸ் இழுபறியில் முன்னிலை, இபிஎஸ்- ஸ்டாலின் வெற்றிமுகம்tamil nadu assembly election results, தேர்தல் முடிவுகள், விஐபி தொகுதிகள், விஐபி வேட்பாளர்கள், ஓபிஎஸ், கமல்ஹாசன், சீமான், எல் முருகன், டிடிவி தினகரன், vip cadidates, ops, kamal haasan, seeman, l murugan, ttv dhinakaran, திமுக, அமமுக, அதிமுக, மநீம, நாதக, dmk, aiadmk, ammk, mnm, ntk
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com