Advertisment

கன்னியாகுமரி தொகுதி: பாலகோடு தாக்குதலும், ஏவுகணை சாதனையும் இங்கு பிரச்னை இல்லை

அவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari

Kanyakumari

Amrith Lal :

Advertisment

கேரளாவின் எல்லையை பிரித்து காட்டும் நீண்ட நெடுஞ்சாலை. மீன், கால்நடை, வேளாண்மை உற்பத்தியில் அதிகளவு ஆர்வம். களியக்காவிளையில் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை 47  தொடங்குகிறது. காங்கிரஸ் சார்பாக திருவனந்தபுரத்தில் போட்டியிடும் சசிதரூர்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு புறம் கூட்டம் கூடுகிறது. கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்து விட்ட பின்பும் கேரளாவைப் போன்றே தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பது மறுக்க முடியாத உண்மை.

2008 தொகுதி மறுசீமைப்புக்குப் பின்னர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இதில் உள்ளன.காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதும் தொகுதியாக பல தேர்தல்களாக இருந்து வருகிறது. இது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செல்வாக்கு உள்ள தொகுதி இது.

முன்பு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்த இந்த தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு கன்னியாகுமரி தொகுதியாக மாறியுள்ளது. பலமுறை காங்கிரஸ் வென்ற இந்த தொகுதியில் பாஜக இரண்டு முறையும், சிபிஎம் மற்றும் திமுக தலா ஒருமுறை வென்றுள்ளன.கேரளாவில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வியாக்கிழமை நிலவரம் தெரிந்து விடும். காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தலையெழுத்தை நிர்ணிக்கும் நாள் மிக தொலைவில் இல்லை. இங்கு தொடர்ந்து எழுப்படும் ஒரே கேள்வி பாஜக இந்து கட்சி என்ற தோற்றத்தை முழுமையாக பரப்பி வரும் நிலையில் இங்கு பாஜகவின் நிலைப்பாடும் எத்தகையது? என்பது தான். காராணம் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இந்த கேள்வியை தொடர்ந்து எழுப்பி வரும் நிலையில் பாஜக அரசு இந்த தொகுதியில் மட்டும் இதற்கான பதிலை கூற தொடர்ந்து மறுத்து வருகிறது.

இங்கு திராவிடத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். 1956 ஆம் ஆண்டுக்கு முன்பே சாதி ரீதியான பிரிவில் மொழி அளவில் கூட பிரிவினை வராமல் மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். மலையாள நாயர்களுக்கு மலையாளம் அவர்களின் தாய் மொழி போல், நாடார் இன மக்களுக்கு தமிழ் அவர்களின் தாய் மொழியாக விரும்பப்பட்டு வருகிறது.இதுவரை பாஜக அரசு

2014 மக்களவை தேர்தலிலும் கன்னியாகுமரியில் தங்களுடைய வெற்றியை பதிவுசெய்துள்ளது. 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதியில் இங்கு வெற்றி பெற்றுள்ளது.

இங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுவாகவே உள்ளூர் பிரச்சனைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி தற்போதைய எம்பியும், பாஜக தலைவர்களில் ஒருவருமான பொன். ராதாகிருஷ்ணன் இதுவரை இந்த தொகுதியில் ஏற்பட்ட வளர்ச்சி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகம் பேசி வருகிறார். கேரள எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மார்த்தாண்டம் என்ற இடத்தில் வர்த்தக மையம் அமைப்பது, சாலை மேம்பாடு, சாலைகள் விரிவாக்கம் ஆகியவற்றில் அதிகளவு கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

முக்கிய பிரச்சனைகள் : நிலம், சர்வதேச துறைமுகம்.

குமரியில் கிடைக்கும் இயற்கை ரப்பர் தெற்காசியாவிலே தரமான ரப்பர் என்ற சிறப்பு பெற்றது. ரப்பர் விவசாயம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். ஆனால் இப்போது இவர்களின் வாழ்வாதாரத்திற்கு சிக்கல் ஏற்படும் வகையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன . தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான காடுகளில் விவசாயிகள் ரப்பர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் நாயர், இதுப்பற்றி கூறுகையில் “விவசாயிகளின் கஷ்டத்தை புரிந்துக் கொள்ளாமல் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்கள் சில் வாக்குறுதிகளை வழங்கி விடுகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சனையை ஏற்றுக் கொள்ள மறுப்பதே உன்மை” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தகத் துறைமுகம் கன்னியாகுமரியில் அமைவதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், பிற பகுதி மக்களிடம் ஆதரவும் நிலவிவருகிறது. எம்பி.பொன் ராதாகிருஷ்ணன் இந்த திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு பெற கடுமையாக முயற்சி செய்தார். 28 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த திட்டமானது தென்னகத்தை மாற்றி அமைக்கும் என்பதே அவரின் பிரதான வாதம். ஆனால் சிலர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் கிராமமான கோவளம் பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இங்கு இந்த திட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டங்களும் நடந்துள்ளன. இதுக் குறித்து இந்த பகுதியை சேர்ந்த எஸ். பிரபா என்ற இளைஞர் கூறியதாவது, “ இந்த துறைமுகத்தால் இங்கு வாழும் 300 குடும்பங்கள் காணமால் போகும். இந்த 300 குடும்பங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டு அதன் மேல் கட்டப்படும் துறைமுகம் யாருக்கும் தேவையில்லை. அதுமட்டுமில்லை இந்த துறைமுகம் மாவட்டத்தின் இரண்டு வற்றாத ஆறுகளில் ஒன்றான பழையாறு தெற்குப் பகுதியின் வேளாண்மையை பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

46 வயதாகும் பிரபா, முன்னிறுத்தும் கேள்வி இதுதான். எப்படி இத்தனை கோடி மதிப்புள்ள திட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்கு வாழும் மக்களிடம் ஒரு அறிவிப்பு அல்லது ஆலோசிக்காமல் அரசியல் தலைவர்களால் எப்படி இந்த முடிவை எடுக்க முடியும்? பிரபாவை போல் முகம்மது சதீக், துறைமுகப் பிரச்சினை குறித்து கைக்காட்டுவது பிரதமர் மோடியை தான். மோடியின் தூண்டுதலால் தான் பொன். ராதாகிருஷ்ணன் மக்களிடம் ஆலோசிக்காமல் இத்தகைய திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியிருப்பதாக கூறுகிறார்.

துறைமுகத்திற்கு சர்ச்சைக்குரிய வரலாறு பிண்ணனியும் உண்டு. முதலில் இந்த மீன் பிடி துறைமுகமானது குளைச்சலில் தொடங்குவதாக பேசப்பட்டது. அங்கு ஏற்பட்ட எதிர்ப்பு அலைகளை தொடர்ந்து தற்போது இங்கு இந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. கன்னியாகுமரியில் பொன்னார் தலைமையில் இந்த திட்டம் உருவாகிவிடலாம் என்று மத்திய அரசு நம்பியுள்ளது. ஆனால் இங்கு இந்த துறைமுகம் அமைக்கப்படுவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் கடல்சார் விஞ்ஞானிகள் சிலர் இங்கு துறை அமைக்கப்பட்டால் அது கடலில் வாழும் மீன் இனப்பெருக்கதை பாதிக்கும் என்றும், கடற்கரையோரம் அமைந்துள்ள மணல் கம்பிகளை முற்றிலும், அழித்து விட்டால் கடலுக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் எனறும் கூறியுள்ளனர்.

கவனிக்க வேண்டியது : சமூக ஓட்டுக்கள்:

இப்போது இங்கு வெற்றியை தீர்மானிப்பது சமூக ஓட்டுக்களாக பார்க்கப்படுகிறது. பாஜக அரசு இந்து ஆதரவை பெறும் என்றாலும் அவர்கள் பிரச்சாரத்தில் திருச்சபைகளை சேர்ந்த பாதிரியார்களும் இடம்பெற்றது மாபெரும் குழப்பதை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் வரலாறு ஆசிரியர் கன்னியாகுமரியின் பன்முக தன்மையை விளக்குகிறார். மக்கள் மதம் அடிப்படையில் எப்படி பிரிந்து இருக்கின்றனர் என்பதையும அவர் விளக்குகிறார். அப்படி இருக்கையில் இந்து ஆதரவாளர்கள் பாஜக பக்கம் செல்வார்கள் என்ற கூற்று இருந்தால், இந்து அல்லாதவர்களின் ஆதரவு காங்கிரஸ் பக்கம் சாய்கிறது.

இந்த தொகுதியின் மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுத்து பார்த்தால் மொத்தம் 18,90 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் இந்துக்களின் எண்ணிக்கை 9.10 லட்சம். கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை 8.80 லட்சம் மற்றும் சிறுபான்மையினர் எண்ணிக்கை 80,000 ஆக இருக்கிறது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பெரும்பாலும் ஓ.பி.சி சமூகத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சி என்ற விமர்சனத்தை பெற்றுள்ள மோடி அரசு இங்கு முஸ்லீம் மக்களின் ஆதரவை பெறுவது கேள்வி குறியாக இருக்கிறது.

அதே நேரம் கன்னியாகுமரியில் வட இந்திய தொழிலாளர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் உள்ளன.இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரும், திரிபுரா பாஜக தலைவருமான சுஜீத் குமார், பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணனும் சரி, காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரும் ஒரே சமூகமான நாடார் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரின் வெற்றியை தீர்மானிப்பது நாடார் சமூக மக்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்து-கிறிஸ்துவர் மோதல்களின் பின்னணி வைத்து தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்து முன்னணி கட்சி ஒரு சட்டமன்ற தொகுதியை வென்றது. ஆனால் அவர்களின் வெற்றி அதன் பின்பு தொடரவில்லை. 1996 ல் எம்.எல்.ஏ. தேர்தல் 1999 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல்களில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இருந்த போதும் இங்கு பாஜக-வின் வளர்ச்சி மிகவும் குறைவே.

இன்று மத ரீதியான பேச்சுகள், பிரிவினை குறித்த பேச்சுகள் அதிகளவில் மேலோங்கியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இதன் தொடர்ச்சி பிரதிபலிக்கிறது. மோடி இந்துக்களின் தலைவராக இருப்பதால் உயர் பதவியில் இருப்பவர்கள் அவருக்கு எதிராக பேசுவதில்லை. நாகர்கோவிலை எடுத்துக் கொண்டால் இங்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு, எஸ்டி பிரிவினர் பயிலும் கல்லூரியின் தரம் ஆகியவை பல ஆண்டுகளாக கேள்வி குறியாக இருப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

50 வயதாகும் முந்திரி தொழிலாளியான சாவித்ரி என்ற பெண்ணின் கருத்து இதுதான். அவர்கள் மோடி ஆட்சி மீண்டும் வேண்டாம் என்கின்றனர். ஜிஎஸ்டி வரி அவர்களை மிகவும் வேதனையில் தள்ளிவிட்டதாகவும், அவர்கள் வேலையை இழந்து தவிப்பதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர். சாதாரண தொழிலாளியான அவருக்கு பாலகோட் தாக்குதல் குறித்தும் இந்தியாவின் ஏவுகணை சாதனை குறித்தும் எந்தவித தகவலும் தெரியவில்லை. அவருக்கு தெரிந்தது அவர்களின் அன்றாட வாழ்வு எப்படி நொறுங்கிவிட்டது என்பது தான்.

Bjp All India Congress Kanyakumari District General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment