நான்கு நாட்கள் பரபரப்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கர்நாடகா அரசு அமைப்பதில் இருந்த முட்டுக்கட்டையை காங்கிரஸ் வியாழக்கிழமை முடிவுக்கு கொண்டு வந்து, சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவகுமாரை துணை முதல்வராகவும் நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
எதிர்பார்த்தபடியே சித்தராமையா முதல்வராக பதவியேற்பார். சிவக்குமார் சில முக்கிய இலாகாக்களுடன் ஒரே துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிவக்குமார் நீடிப்பார்.
இரண்டரை ஆண்டு காலப் பகிர்வுக்கு கட்சித் தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாக சிவக்குமார் முகாம் கூறியுள்ள நிலையில், தலைமை அதை பகிரங்கமாக அறிவிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருவரும் மே 20ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
சித்தராமையாவுடன் பகிரப்பட்ட பதவி, அல்லது சில முக்கிய இலாகாக்களுடன் துணை முதல்வர் பதவி ஆகிய மத்தியக் கட்சித் தலைமையின் சலுகைகள் குறித்து சிவகுமார் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை.
கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றிய மாநில காங்கிரஸ் தலைவர் என்ற அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, இரண்டு அல்லது மூன்று துணை முதல்வர்களில் ஒருவராக ஆவதற்கு அவர் ஆர்வம் காட்டவில்லை.
சிவக்குமாரை மட்டும் துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நள்ளிரவில் தலைமை ஒப்புக்கொண்டதையடுத்து ஒப்பந்தம் போடப்பட்டது.
காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் (CLP) தலைவராக சித்தராமையா அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ள காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“