Advertisment

கர்நாடகாவில் காங்கிரஸ் ரிசார்ட் அரசியல்: பெங்களூரு, மகாபலிபுரத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள்

காங்கிரஸ் அதன் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க பெங்களூருவிலும், மகாபலிபுரத்திலும் இரண்டு ஹோட்டல்களை பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Karnataka

Karnataka Election Results 2023

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், அதன் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க பெங்களூருவிலும், மகாபலிபுரத்திலும் இரண்டு ஹோட்டல்களை பதிவு செய்துள்ளது.

Advertisment

பெங்களூருவில் உள்ள ஷங்கிரி லா ஹோட்டலை காங்கிரஸ் முன்பதிவு செய்துள்ளதாகவும், 130 இடங்களைக் கடந்தால் அங்கு முகாமிட திட்டமிட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சி அவ்வாறு செய்யத் தவறினால், வேட்டையாடும் முயற்சிகளைத் தவிர்ப்பதற்காக அதன் தலைவர்களை தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது பெரும்பாலும் "ரிசார்ட் அரசியல்" என்று குறிப்பிடப்படுகிறது, இது இந்தியாவில் உள்ள எந்தக் கட்சிக்கும் அல்லது மாநிலத்திற்கும் புதியது அல்ல.

1980 களில் இருந்து, கூட்டணி அரசாங்கங்கள் வழக்கமாகிவிட்டதால், ரிசார்ட் அரசியல் இப்போது பிரபலமாகிவிட்டன.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முயலும் ஒரு கட்சியால் எம்.எல்.ஏ.க்கள் வளைக்கப்பட வேண்டியிருக்கும் போது, இது வழக்கமாக நடைமுறையில் உள்ளது, மேலும் எம்.எல்.ஏக்கள் போட்டிக் கட்சிகள் அல்லது குழுக்களுடன் மறைமுகமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஒரு கட்சி அல்லது மாநிலத்தில் தலைமைத்துவப் போராட்டங்கள் இருக்கும் போது, ​​ மற்றும் சபையில் உள்ள எண்ணிக்கை குறிப்பாக எந்தக் கட்சிக்கும் சாதகமாக இல்லாதபோது இது அடிக்கடி நிகழ்கிறது.

2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதால் காங்கிரஸும் இந்த முறை கூடுதல் எச்சரிக்கையுடன் உள்ளது. அப்போது காங்கிரஸ் மற்றும் மதசாற்றபற்ற ஜனதா தள கட்சிகள் இணைந்து 116 எம்எல்ஏக்களுடன் (காங்கிரஸ் 76, ஜேடிஎஸ் 37 மற்றும் 3 சுயேச்சைகள்) ஆட்சி அமைத்தன.

இருப்பினும், அது ஓராண்டு மட்டுமே நீடித்தது. பிறகு காங்கிரஸ்- மதசாற்றபற்ற ஜனதா தளம் அதன் 17 எம்எல்ஏக்களை இழந்தது, அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்தனர் - மும்பையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அடைக்கப்பட்ட பின்னர் – அவர்கள் பாஜக பக்கம் மாறினார்கள்.

கர்நாடக பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா முதலமைச்சரானார் ஆனால் ஜூலை 26, 2021 அன்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment