Advertisment

இந்த முறை ஒன்பது முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள்: கர்நாடக தேர்தலில் சாதித்த காங்கிரஸ்

மாநில மக்கள் தொகையில் சுமார் 13% முஸ்லிம்கள் உள்ளனர். ஒன்பது பிரதிநிதிகளுடன், மாநில சட்டமன்றத்தில் அவர்களின் பங்கு இப்போது 4.01% ஆக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karnataka

Karnataka election results

16வது கர்நாடக சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகரித்துள்ளது, 224 உறுப்பினர்களைக் கொண்ட சபைக்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனைத்து முஸ்லிம் எம்எல்ஏக்களும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மற்றும் கட்சி நிறுத்திய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 15 வேட்பாளர்களில் அடங்குவார்கள்.

Advertisment

ஒரு கிறிஸ்தவ எம்.எல்.ஏ - காங்கிரஸின் கே.ஜே. ஜார்ஜும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநில மக்கள் தொகையில் சுமார் 13% முஸ்லிம்கள் உள்ளனர். ஒன்பது பிரதிநிதிகளுடன், மாநில சட்டமன்றத்தில் அவர்களின் பங்கு இப்போது 4.01% ஆக உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், அதிகபட்சமாக 2013 இல் 11 முஸ்லிம் எம்எல்ஏக்கள் வென்றனர். காங்கிரஸின் ஒன்பது மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இருவர் - தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு முதல், முஸ்லிம் சமூகத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன.  கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது, ஒலிபெருக்கியில் தொழுகைக்கு  அழைப்பு விடுப்பது, ஹலால் இறைச்சி விற்பனை செய்வது, முஸ்லிம்களின் பொருளாதாரப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுப்பது, சில இடங்களில் கோயில் திருவிழாக்களில் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டது - மாநிலத்தை உலுக்கியது.

ஒன்பது முஸ்லிம் எம்எல்ஏக்களில் ஏழு பேர் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் தொகுதிகளில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். BZ ஜமீர் அகமது கான் பெங்களூருவில் உள்ள சாமராஜா சட்டமன்ற தொகுதியில் இருந்து ஆறாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆறு வெற்றிகளில் முதல் மூன்று வெற்றிகள் அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக இருந்தபோது வந்தவை. அவர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியும் பெங்களூரு நகர முன்னாள் போலீஸ் கமிஷனருமான பாஸ்கர் ராவை 53,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்காக போலீஸ் சேவையிலிருந்து விலகிய ராவ், தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

முந்தைய பாஜக ஆட்சியில் காங்கிரஸின் துணை எதிர்க்கட்சித் தலைவராக (LoP) இருந்த யு டி காதர் மங்களூரில் 22,977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மைசூரு நகரில் நரசிம்மராஜா தொகுதியில் முன்னாள் அமைச்சர் தன்வீர் சேட் 31,091 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் குல்பர்கா தொகுதியில் ஒரே ஒரு முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமா 2,979 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகன், மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளர் வேட்பாளர் நிகில் குமாரசாமியை தோற்கடித்த இக்பால் உசேன், முதல்முறையாக சட்டசபைக்கு நுழைகிறார். ராமநகரா தொகுதியில் 10,846 வாக்குகள் வித்தியாசத்தில் நிகிலை, ஹுசைன் தோற்கடித்தார்.

மற்ற முஸ்லீம் வெற்றியாளர்கள் ஆசிப் சைட் முதல் முறையாக பெல்காம் உத்தர் தொகுதியில்  இருந்து வெற்றி பெற்றார், ரிஸ்வான் அர்ஷாத் சிவாஜிநகரில் இருந்து இரண்டாவது முறையாகவும், சாந்தி நகரிலிருந்து என் ஏ ஹரீஸ் நான்காவது முறையாகவும், பிதார் தொகுதியில் இருந்து ரஹீம் கான் மூன்றாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் நிறுத்தப்பட்ட 23 முஸ்லிம் வேட்பாளர்களில் யாரும் வெற்றி பெறவில்லை. மாநில தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்சி சிஎம் இப்ராகிமை கட்சி தலைவராக நியமித்தது. பாஜக பட்டியலில் முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ வேட்பாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.

1978 இல் மாநிலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை 16 ஆக இருந்தது, அதே சமயம் 1983 இல் நடந்த தேர்தல்களில் மிகக் குறைவாக இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர்.

கர்நாடக சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

2023

மொத்தம்: 9 (காங்கிரஸ்: 9)

2018

மொத்தம்: 7 (காங்கிரஸ்: 7)

2013

மொத்தம்: 11 (காங்கிரஸ்: 9; மதசார்பற்ற ஜனதாதளம்: 2)

2008

மொத்தம்: 8 (காங்கிரஸ்: 7; மதசார்பற்ற ஜனதாதளம்: 1)

2004

மொத்தம்: 5 (காங்கிரஸ்: 3; மதசார்பற்ற ஜனதாதளம்: 2)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment