கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை விட காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா மாநில நலன் கருதி தனது தந்தை “அறுதிப் பெரும்பான்மையில்” வெற்றி பெற்று, முதலமைச்சராக வருவார் என்று சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஒரு மகனாக, நிச்சயமாக நான் அவரை முதலமைச்சராக பார்க்க விரும்புகிறேன். ஆனால் மாநிலத்தில் வசிப்பவராக, அவரது கடந்த ஆட்சியில் மிகச் சிறந்த ஆட்சி இருந்தது. இந்த முறையும், அவர் முதல்வரானால், பாஜக ஆட்சியில் நடந்த ஊழலை அவர் சரி செய்வார், என்று யதீந்திர சித்தராமையா கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கான சண்டை வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக, இருவரும் தங்கள் பகையை விட்டு வெளியேறி நட்பு பாராட்டினர்.
சித்தராமையா வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர்களுடன் தனித்தனியாக தனது இல்லத்தில் சந்திப்புகளை நடத்தியபோது, சிவகுமார், மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அதே நேரத்தில் "மேலிடத்தின் முடிவுக்கு" தான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கட்சிக்காக பாடுபட்டுள்ளேன், அனைவரும் என்னை ஆதரிப்பார்கள். இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து (2019) தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்த பிறகு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நான் தூங்கவில்லை, தூங்கவும் மாட்டேன். கட்சிக்கு தேவையானதை நான் செய்துள்ளேன்... அனைவரும் என்னை ஆதரிப்பார்கள், நல்ல ஆட்சியை வழங்குவேன் என்றார்.
தேர்தலுக்கு முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர்நிலைக் குழு, முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று சித்தராமையா பலமுறை கூறினார்.
அவரது சொந்த பூமியான வருணாவில், இன்று கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், சித்தராமையா முன்னிலை வகித்தார். இத்தொகுதியில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர், இதில் லிங்காயத்துகள் பெரும்பான்மையாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”