சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி! முடிவுக்கு வந்த இழுபறி!

கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை சிவகங்கையில் எதிர்த்து போட்டி

கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை சிவகங்கையில் எதிர்த்து போட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karti Chidambaram contest from Sivaganga congress announced Lok sabha election 2019 - சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி! முடிவுக்கு வந்த இழுபறி!

Karti Chidambaram contest from Sivaganga congress announced Lok sabha election 2019 - சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி! முடிவுக்கு வந்த இழுபறி!

சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளராக நீண்ட இழுபறிக்கு பின்னர் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை கார்த்தி சிதம்பரம் எதிர்கொள்கிறார்.

Advertisment

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதுவை மற்றும் தமிழகத்தில் என மொத்தம் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இதில், சமீபத்தில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலின் படி, விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர், திருச்சியில் திருநாவுக்கரசர், கரூரில் ஜோதி மணி, கன்னியாகுமரியில் ஹெச்.வசந்த குமார், திருவள்ளூரில் ஜெயக்குமார், தேனியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், ஆரணியில் விஷ்ணு பிரசாத், புதுச்சேரியில் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் சிவகங்கை தொகுதியில் மட்டும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. 2 நாட்களாக அந்த தொகுதி வேட்பாளர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது அங்கு கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

காங்கிரஸ் இன்று வெளியிட்ட 9வது வேட்பாளர்கள் பட்டியலில் கார்த்தி சிதம்பரத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை சிவகங்கையில் எதிர்த்து போட்டியிடுகிறார். கடந்த 2014 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4-வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மோதுகின்றன. கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்த குமார் களத்தில் நிற்க, சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ளார்.

Karti Chidambaram Sivagangai General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: