Advertisment

'செய் அல்லது செத்து மடி': கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரி பலப்பரீட்சை

kerala Assembly Election 2021 News : முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலை சந்திக்க உள்ளது

author-image
WebDesk
New Update
'செய் அல்லது செத்து மடி': கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரி பலப்பரீட்சை

கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) கூட்டணிக்கும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே தேர்தல் பலப்பரீட்சை நடக்கவுள்ளது. இவ்விரு கூட்டணிகளும் கடந்த சில பத்தாண்டுகளாக மாறிமாறிக் கேரளாவில் ஆட்சி அமைத்து வருகின்றன.

Advertisment

இந்தியாவில், இடது சாரிக் கட்சிகள் கேரள மாநிலத்தி்ல் மட்டுமே ஆட்சி புரிகின்றது. எனவே, இந்த தேர்தலில் ஆட்சியில் இழக்குமானால், நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இடதுசாரிகள் வெளியேற்றப்படுவதை குறிக்கும் . எவ்வாறாயினும், சமீபத்தில் நடந்து முடிந்த கேரளா உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தது.  இந்த வெற்றி அக்கூட்டணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.

இதுதவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி ஜனநாயக முன்னணி தேர்தலை சந்திக்க உள்ளது.

இதுதவிர, 2009ல் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த மதச் சார்பற்ற ஜனதா தளம் தற்போது  இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு திரும்பியுள்ளது.  மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த வந்த கேரள காங்கிரஸ் (எம்) இடதுசாரி கூட்டணிகளுடன் இணைந்துள்ளது. கேரள காங்கிரஸ் (எம்) கட்சியானது, மத்திய கேரளாவில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அக்கட்சிக்கு தனி செல்வாக்கு உண்டு.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை, இந்த தேர்தல் முடிவுகள் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின்  இருத்தலுக்கான போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் ஏற்பட்ட இழப்பைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை சந்தித்தால் ‘காங்கிரஸ் இல்லாத கேரளா’ என்ற பாஜகவின் கூச்சலுக்கு இரையாகும் என்று பல காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சுகின்றனர்.

தற்போது, ​​மாநிலத் தேர்தல் நடவடிக்கைகளை இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும், பாஜகவை திறம்பட எதிர்கொள்வதற்கும், முஸ்லிம் வாக்குகளை கைப்பற்றுவதற்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்  (ஐ.யூ.எம்.எல்) கட்சியை அதிகம் எதிர் நோக்குகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை கேரளா காங்கிரஸ் கடுமையாக முன்னெடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக, கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி கட்சிகள் கடுமையான சரிவை சந்தித்தன.

 

publive-image

 

இதற்கிடையே, கேரளா ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. கேரளா இடதுசாரி அரசின் இந்த நடவடிக்கையால் கடலோர   மீனவ சமூகங்கள் கொந்தளித்தன. ஐக்கிய முற்போக்கு முன்னணி கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைமை உடனடியாக செயல்பட்டு, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மீண்டும் தீவிர அரசியலில் களம் இறக்கியுள்ளது.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சி வெளியேற்றத்துக்குப் பின், காங்கிரஸ் கூட்டணி தனது 70 ஆண்டுகால பாரம்பரிய வாக்கு வங்கியான கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் தன்னகத்தே வைத்திருக்க போராடி வருகிறது.  இருப்பினும், கூட்டணிக்குள் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதிக்கம் செலுத்தி வருவதை சில கிறிஸ்துவ பிரிவினர் மேற்கோள் காட்டி வருகின்றனர். பாஜக, இந்த கருத்தை பல தொகுதிகளில் முன்வைக்கத் தொடங்கியுள்ளது.

வழக்கம் போல், மதச்சார்பற்ற வாக்குகளைப் ஒருங்கிணைப்பதற்கு இடது சாரியும், காங்கிரஸும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றன.

முன்னதாக, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக களமிறங்கிய  ஓ ராஜகோபால் நேமம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். இந்துமத ஆதரவு கட்சியான பாரத் தர்ம ஜனசேனா உடன்  (பி.டி.ஜே.எஸ்) போராடிய ஏழு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள்  இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். இருப்பினும், கட்சி  பிளவுபட்ட காரணத்தினால், அதன் அரசியல் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. அக்கட்சியைச் சேர்ர்ந்த பலத் தலைவர்கள் சமீபத்திய நாட்களில்  பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சி பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர் பினராயி விஜயன், “அரசாங்கத்தை மதிப்பீடு செய்வது மக்கள் தான். இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியைப்  பொறுத்தவரை, வளர்ச்சி என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான செயல் வடிவமாகும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம், எதிர்க்கட்சி மக்களை அவமதித்துள்ளது, ’’என்றார்.

Kerala Kerala Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment