கேரளாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதற்கு காரணமாக இந்த தேர்தலில் பாரம்பரியமாக காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் இன் முதுகெலும்பாக இருந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற இரண்டு சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் இடதுசாரி கூட்டணிக்கு மாறியதுதான். காங்கிரஸை கைவிட்டு, சிபிஐ (எம்) க்கு பின்னால் அணிவகுக்க இந்த இரு சமூகங்களுக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
2019 ஆம் ஆண்டு சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு, பாஜகவை வீழ்த்துவதற்கான சக்தியாக சிபிஐ (எம்) கட்சி அடையாளம் காணப்பட்டதால், முஸ்லிம் சமூகம் சிபிஐ (எம்) உடன் நெருங்கியது. குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் செயல்படுத்தப்பட மாட்டாது என்ற முதலமைச்சர் பினராயி விஜயனின் அறிவிப்பு, சிஏஏ சட்டத்திற்கு எதிராக சிபிஐ (எம்) இன் மனித சங்கிலி போராட்டம், போன்றவை ஐயூஎம்எல் சார்பு முஸ்லீம் அமைப்புகளிடம் கூட சிபிஐ (எம்)க்கு ஆதரவை உருவாக்கியது. தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவில் CAA சட்டம் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், பாஜகவின் தேர்தல் அறிக்கையும் முஸ்லிம் சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியது. “லவ் ஜிஹாத்” க்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் தீவிரவாதத்தைத் தடுப்பதற்காக மத அமைப்புகளை அரசாங்கம் கண்காணிக்கும் போன்றவை முஸ்லீம் சமூகங்களை பாஜகவிடமிருந்து தூரமாக்கியது. வலுவான இந்துத்துவ கொள்கையை முன்னிறுத்தும் விதமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய வெளி மாநிலங்களிலிருந்து மூத்த தலைவர்களை பாஜக களமிறக்கியது.
பாஜக தான் வைத்திருந்த ஒரே தொகுதியான நெமோம் தொகுதியை குஜராத் போல் மாற்றுவதாக பாஜகவின் மூத்த தலைவர் கும்மனம் ராஜசேகரன் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் அமைதியாக இருந்தபோது, விஜயனிடமிருந்து ஒரு உறுதியான பதில் வந்தது, எல்.டி.எஃப் பாஜகவின் நெமோம் கணக்கையும் மூடிவிடும் என்று அவர் கூறினார்.
இடதுசாரிகளின் மீதான சமூகங்களின் நம்பிக்கை, வாக்குகளாக மாற்றப்பட்டது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பாஜகவிற்கு வசதியாக இருந்த நெமோம், காழக்கூட்டம் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் சிபிஐ (எம்) க்கு பின்னால் அணிதிரண்டனர், இதனால் எல்.டி.எஃப் இந்த இரண்டு இடங்களையும் வென்றது.
கோட்டயத்தின் பூஞ்சர் தொகுதியில், முஸ்லிம் சமூகத்தின் தேர்வு எல்.டி.எஃப் ஆக இருந்தது. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி சி ஜார்ஜுன் முஸ்லிம் எதிர்ப்பு அறிக்கைகள் காரணமாக அவர் சிறுபான்மை சமூக ஆதரவை இழந்தார். இங்குள்ள முஸ்லீம் சமூகங்கள் பாரம்பரியமாக யுடிஎஃப் பக்கம் நின்றது. ஜார்ஜ் பல தசாப்தங்களாக யுடிஎஃப் மூலம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் ஒரு காலத்தில் என்.டி.ஏ முகாமுக்குள் நுழைந்ததால் அவர் தோற்கடிக்கப்பட்டார், ஆனால் இந்த எதிர்ப்பு யு.டி.எஃப்க்கானது அல்ல. பூஞ்சரில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பாஜக ஒரு வலுவான போராட்டத்தை நடத்திய திருவனந்தபுரம் மத்திய தொகுதியில், முஸ்லிம்களின் தேர்வு காங்கிரஸின் பலமான வேட்பாளர் வி எஸ் சிவகுமார் அல்லாமல், அதிகம் பிரபலமாகாத எல்.டி.எஃப் வேட்பாளர் அந்தோனி ராஜு ஆக இருந்தது. ஆச்சரியமளிக்கும் வகையில் அந்தோனி வெற்றி பெற்றுள்ளார்.
ஐ.யூ.எம்.எல் இன் தளமான மலப்புரத்தில், எல்.டி.எஃப் கடந்த முறை பெற்ற நான்கு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது. அது தவிர, எல்.டி.எஃப் பல இடங்களில் ஐ.யூ.எம்.எல் இன் வாக்கு வித்தியாசத்தைக் குறைத்தது.
மறுபுறம் கிறிஸ்தவ சமூகம் இடதுசாரிகள் பக்கம் சாய்வதற்கு ஒரு தனி காரணம் இருந்தது. மத்திய கேரள மாவட்டங்களான இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய இடங்களில், குறிப்பாக கத்தோலிக்கர்களின் கணிசமான வாக்குகள், யு.டி.எஃப் இல் ஐ.யூ.எம்.எல் இன் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்ப்பதற்கான அடையாளமாக எல்.டி.எஃப்க்கு சென்றது.
சிறுபான்மை நலத் திட்டங்களில் ஒதுக்கீட்டைப் பகிர்வதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கிகளுக்கு இடையேயான பிளவு ஆழமாக வளர்ந்த நேரத்தில் காங்கிரஸ் இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. ஐ.யூ.எம்.எல் யு.டி.எஃப் இல் வளர்ந்து வருவதை சர்ச் விமர்சித்தது, யு.டி.எஃப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது கிறிஸ்தவர்களின் நலன்களை பாதிக்கும் என்று அஞ்சியது.
ஐ.யூ.எம்.எல் மூத்த தலைவர் பி.கே.குன்ஹாலிக்குட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிட எம்.பி. பதவியை ராஜினாமா செய்தது அந்த விவாதத்திற்கு எரிபொருளை அதிகரித்தது. மேலும், ஐ.யூ.எம்.எல் இன் போன்ஹோமி மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமியுடனான தொடர்பு யு.டி.எஃப்லிருந்து சர்ச் விலகுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
ஒரு காலத்தில் காங்கிரஸுடன் நின்ற இரு சமூகங்களுக்கிடையில் ஒரு பிளவை ஏற்படுத்த, “லவ் ஜிஹாத்” க்கு எதிரான தனது பிரச்சாரத்துடன் பாஜகவும் இறங்கியது. தேர்தலின் போது, பிராந்திய கிறிஸ்தவ கேரள காங்கிரஸ் கட்சி (எம்) தலைவர் ஜோஸ் கே மணியின் அறிக்கை, லவ் ஜிஹாத் குறித்து அக்கறை இருப்பதாகக் கூறியது, இது மத்திய கேரளாவில் நிலவும் முஸ்லீம் விரோத உணர்வுகளைத் தட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டது.
கோழிக்கோடு மாவட்டத்தில், கத்தோலிக்க சமூகத்தின் ஐ.யூ.எம்.எல் உடனான கசப்பின் வீழ்ச்சியாக யு.டி.எஃப் தனது பாதுகாப்பான இடமான திருவாம்படியை சிபிஐ (எம்) க்கு இழந்தது.
அதேநேரம் கிறிஸ்தவர்களுக்கு விஜயனின் வாக்குறுதிகளாக கிறிஸ்தவ சமூகத்தின் சமூக-பொருளாதார நிலையை அறிவதற்காக ஒரு குழுவை நியமிப்பது மற்றும் தொற்றுநோய்களின் போது மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் முறையின் எல்லைக்குள் கான்வென்ட்கள் மற்றும் அத்தகைய மத சமூகங்களைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil