மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா… மீண்டும் ஒரு சதிலீலாவதி காம்போ

தேர்தல் நெருங்கும் வேளையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை கோவை சரளா புதிதாக இணைந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் களப்பணிகளில் ஆர்வமாக இறங்கியுள்ளனர். முன்னணி கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் தனது கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா […]

Kovai Sarala, கோவை சரளா

தேர்தல் நெருங்கும் வேளையில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை கோவை சரளா புதிதாக இணைந்திருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் களப்பணிகளில் ஆர்வமாக இறங்கியுள்ளனர். முன்னணி கட்சிகளும் கூட்டணிகளை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசன் தனது கட்சியில் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த கோவை சரளா

குறிப்பாக சினிமா பிரபலங்களை இக்கட்சியில் இணைக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் கமல் ஹாசன். அந்த வகையில் இவருடன் இணைந்து நடித்த கோவை சரளாவும் இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சியில், கமல் ஹாசன் முன்னிலையில் கோவை சரளா இக்கட்சியில் இணைந்தார்.

kovai sarala, கோவை சரளா

அப்போது பேசிய அவர், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளிர் ஆதரவு பெருகி கொண்டிருப்பதாகவும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kovai sarala joins makkal needhi maiam

Next Story
2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கு – தள்ளுபடிchennai high court news - 'ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட அனுமதிக்க முடியாது' - ஐகோர்ட் கடும் கண்டனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com