Lalthlamuani : மிசோரம் மாநிலத்தில் இருக்கும் ஒரே ஒரூ நாடாளுமன்ற தொகுதியில் லால்த்லாமௌனி என்ற 63 வயது மிக்க பெண் ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மிசோரம் வரலாற்றில், நாடாளுமன்ற தேர்தலுக்காக போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையையும் பெறும் இந்த வேட்பாளர் 10ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்.
இது குறித்து கேட்ட போது, 10ம் வகுப்பு படித்த என்னாலே இவ்வளவு தூரம் போட்டியிட முடியும் என்றால், நன்றாக படித்த இளம் பெண்கள் என்னிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் திறமையுடன் அரசியலில் களம் காண்பார்கள் என்று கூறியுள்ளார்.
மிசோரம் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலுக்கு பெண் வேட்பாளர்
லால்த்லாமௌனி மிசோரம் பகுதியில் இருக்கும் யூத மக்களுக்காக என்.ஜி.ஒ. ஒன்றை நடத்தி வரும் யூத பெண்மணியாவார். இஸ்ரேலின் தொலைந்து போன பழங்குடிகள் என்று நம்பப்படும் இவர்கள் மன்னர் சாலமன் இறந்த பின்பு மங்கோலியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள். அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சிலர் தற்போது மிசோரம் மற்றும் திரிபுரா பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
சின்லுங் இஸ்ரேல் பீப்பிள் கன்வென்சன் என்று கூறப்படும் இந்த என்.ஜி.ஓ வாயிலாக கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூத மக்களின் நலனுக்காக போராடி வருகிறது. 1070க்குப் பிறகு கிட்டத்தட்ட 20000 யூதமக்கள் தங்களின் பூர்விகமான இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் லல்த்லாமௌனி இங்கு போட்டியிடுகின்றார்.
கடந்த நவம்பர் மாதம் இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 15 பெண்கள் பங்கேற்றனர். ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. ஜோரம் தார் கட்சி வேட்பாளாராக நின்ற லல்த்லாம்மௌனி 69 வாக்குகளே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற போட்டியாளர்கள்
இப்பெண்ணையும் சேர்த்து இந்த தொகுதியில் மொத்தம் ஆறு நபர்கள் போட்டியிடுகின்றனர்.
மிசோ நேசனல் ஃப்ரெண்ட் - சி. லால்ரோசங்கா
காங்கிரஸ் + ஜோரம் மக்கள் இயக்கம் - லாங்கிங்லோவா ஹ்மார்
பாஜக - நிருபம் சக்மா
PRISM - லால்வென்ச்சுங்கா
லால்ஹ்ரியாட்ரெங்கா சாங்தே என்ற சுரங்க பொறியாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க : மூன்றில் ஒரு பங்கு : வெறும் கனவாகிறதா 33% இடஒதுக்கீடு ?