Tamil Nadu By Election: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 38 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற்றது.
பணப்புழக்கத்தால் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
Latest political news Tamil nadu by election
இந்நிலையில், காலியாக இருந்த 24 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கவிருக்கிறது.
தற்போது இந்தத் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Live Blog
Latest political news Tamil nadu by election live updates
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.
“கட்சி பாகுபாடின்றி ஒட்டுமொத்த மக்களும் ஊழல் அதிமுக ஆட்சி மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர்”
-கழக தலைவர் @mkstalin அவர்கள் உரை.#ByElections2019 pic.twitter.com/b5tJxgmP1o
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) May 2, 2019
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியின் வெற்றி உறுதியாகி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்” என்றார்
ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுடன் கலந்துரையாடல். https://t.co/irYaNCKRiz
— M.K.Stalin (@mkstalin) May 2, 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights