Advertisment

Tamil Nadu By Election: 4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்!

Tamil Nadu By Election Live: பணப்புழக்கத்தால் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election Commission Of India, election commission of india press conference today, இந்திய தேர்தல் ஆணையம்

Tamil Nadu By Election: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 38 மக்களவைத் தொகுதிகளுடன் சேர்த்து, 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற்றது.

Advertisment

பணப்புழக்கத்தால் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

Latest political news Tamil nadu by election

இந்நிலையில், காலியாக இருந்த 24 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கவிருக்கிறது.

தற்போது இந்தத் தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Live Blog

Latest political news Tamil nadu by election live updates

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள்.



























Highlights

    15:58 (IST)02 May 2019

    தி.மு.க ட்வீட்!

    15:35 (IST)02 May 2019

    4 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல்!

    ஓட்டப்பிடாரம்- 15

    திருப்பரங்குன்றம்- 37

    சூலூர் - 22

    அரவக்குறிச்சி - 63

    14:30 (IST)02 May 2019

    பணம் பறிமுதல்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.9.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

    14:25 (IST)02 May 2019

    4 தொகுதி இடைத்தேர்தல்

    4 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். 

    11:40 (IST)02 May 2019

    கனிமொழியின் வெற்றி உறுதி

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில், இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியின் வெற்றி உறுதியாகி விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்” என்றார்

    11:18 (IST)02 May 2019

    ஒட்டப்பிடாரத்தில் மு.க.ஸ்டாலின்

    11:11 (IST)02 May 2019

    மதுரையில் ஓ.பி.எஸ் பிரச்சாரம்

    மதுரையை அடுத்த சிலைமான் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    11:06 (IST)02 May 2019

    ஓ.பி.எஸ் உருக்கம்!

    ஓ.பி.எஸ் பா.ஜ.க-வில் இணைவதாக சில நாட்களாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், “உயிர்போகும் நாளில் அதிமுக கொடியைப் போர்த்துவதையே வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்” என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ்

    தமிழகத்தில் காலியாக இருக்கும் 24 சட்டமன்றத் தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலோடு சேர்ந்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
    Dmk Aiadmk General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment