Lok Sabha Election 2019 DMK vs ADMK : ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலும் 18 சட்டசபை இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. மார்ச் 19ம் தேதியில் இருந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணிகளை உறுதி செய்து, போட்டியிடும் தொகுதிகள், மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களை அறிவித்துவிட்டது.
இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் கிரௌன்பிளாசா தனியார் ஹோட்டலில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது என்ற அறிவிப்பினை வெளியிட்டது.
Lok Sabha Election 2019 DMK vs ADMK
தென்சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, நீலகிரி, பொள்ளாச்சி என எட்டு இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது திமுக - அதிமுக. அதே போல் இரட்டை இலை சின்னமும் உதயசூரியனும் நேரடியாக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பெரம்பலூரில் ஐஜேகே மற்றும் நாமக்கலில் கொ.ம.தே.கவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அதே போல் புதிய நீதிக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் வேலூரில் திமுகவை எதிர்த்து போட்டியிடுகிறது.
Congress Vs BJP
இரண்டு கட்சிகளும் 20 இடங்களில் போட்டி என்ற நிலையில் 11 இடங்களில் நேரடியாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸூம் நேரடியாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் கடுமையான போட்டி இம்முறை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியினர் போட்டியிடும் தொகுதிகள் என்ன ?
திமுக - பாமக நேரடிப் போட்டி
திமுகவும் பாமகவும் நேரடியாக 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் ஏழு தொகுதிகளில் விழுப்புரம் நீங்கலாக மீதம் இருக்கும் தருமபுரி, கடலூர், திண்டுக்கல், அரக்கோணம், மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றனர்.