Lok Sabha Election 2019 Theni Constituency Results : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் வேலூர் தொகுதியில் பல இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதால் அங்கு தேர்தலை ரத்து செய்து ஏப்ரல் மாதம் 16ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
திமுக 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், விசிக இரண்டு இடங்களிலும், மார்க்.கம்யூனிஸ்ட், இந்திய மார்க். கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஐஜேகேவிற்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு இடமும், மதிமுகவிற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் தரப்பு கரூர், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, திருச்சி, திருவள்ளூர், ஆரணி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. இதில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் காங்கிரஸ் முன்னிலை பெற்று வந்துள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை களம் இறக்கியது காங்கிரஸ். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அந்த தொகுதியில் களம் இறங்கியவர் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன், ரவீந்திரநாத் குமார். அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.
ஈரோடு, திருப்பூர், மற்றும் கோபி போன்ற கொங்கு மண்டலங்களில் நல்ல அறமுகம் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தேனி தொகுதியில் இவருடைய செல்வாக்கு என்பது மிகவும் குறைவு தான்.
தற்போதெல்லாம் வாக்களிக்கும் வாக்காளர்கள், வேட்பாளர்கள் தங்களின் சொந்த தொகுதியில் குடியிருக்க வேண்டும் என்றும், குறைகள் கேட்கவாவது அடிக்கடி நம் வார்டுகளுக்கு வர வேண்டும் என்று விரும்புவதும் ஒரு பக்கம் இருக்க ஈரோட்டில் பிரபலமான முன்னாள் மக்களவை இணை அமைச்சரை தேனியில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்.
ரவீந்தர்நாத் குமார்
தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் மகன் ரவீந்தர்நாத் குமார். மக்களின் பார்வைக்கு அவர் மண்ணின் மைந்தர். மேலும் பெரியகுளம், போடி, உத்தமபாளையம் போன்ற தொகுதிகள் முந்தைய காலக்கட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. அதிமுக பெயரைச் சொல்லி அங்கு வேறு யாரை நிறுத்தினாலும் போட்டியில் வெற்றி தான். ஓ.பி.எஸ் மகன் என்றால், சொல்லவா வேண்டும் என்றும் அங்கு சிலரின் குரல் கேட்டு வருகிறது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைகள் கறைபடாதவை, ஆனால் பணம் எக்கச்சக்கமாக புழங்கும் ஒரு தொகுதியில் அவரை களம் இறக்கினால் அவர் என்ன தான் செய்வார் என்றும் வருத்தப்பட்டு வருகின்றனர் சிலர். மதிமுகவிற்கு ஈரோட்டை தாரை வார்த்ததிற்கு பதிலாக காங்கிரஸிற்கு கொடுத்திருக்கலாம் என்றும், தேனியில் ஈ.வி.கே.எஸிற்கு பதிலாக திருநாவுக்கரசை களம் இறக்கியிருக்கலாம் என்றும் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய ஆலோசனையில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் தமிழகத்தில் ஸ்வைப் செய்து தாமரைக்கு கடந்த முறை கிடைத்த ஒரே ஒரு தொகுதியில் இருந்தும் வெளியேற்றிவிட்டு நிம்மதி அடைந்து வருகின்றனர் தமிழக மக்கள். இப்போதைய ஆறுதல் அவர்களுக்கு இது தான்.
Lok Sabha Election 2019 Theni Constituency Results
இன்னும் சில மணி நேரங்களில் யார் யார் எவ்வளவு வாக்குகள் பெற்றனர், எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் என்பது போன்ற அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.