பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கை மேல் கிடைத்த பலனைப் பாருங்கள்! மகிழ்ச்சியில் பீகார் முதல்வர்…

2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன.

NRC, Citizenship Act criticism
NRC, Citizenship Act criticism

Ankita Dwivedi Johri

General Election 2019 Bihar Results : பீகாரின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீதம் இருக்கும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் படு தோல்வியை தழுவியுள்ளது.

உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும், ஜித்தன் ராம் மஞ்சியின் ஹாம் செக்யூலர், முகேஷ் சாஹ்னியின் வி.ஐ.பி. கட்சியும் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டது. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்ஷ்க்தி கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார். அவரின் முடிவு இன்று அவருக்கு நல்ல வெற்றியை அளித்திருக்கிறது.

மேலும் படிக்க : வரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி!

General Election 2019 Bihar Results : முக்கிய தொகுதிகள்

பிரச்சாரக் கூட்டத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே பயணித்த நிதிஷ் குமாருக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். பாட்னாவில் ரவி சங்கர் பிரசாத் முன்னிலை பெற்றார். சத்ருகன் சின்ஹா அவரை எதிர்த்து போட்டியிட்டார்.

பெகுசராய் தொகுதியில் 1,71,703 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வருகிறார் சி.பி.ஐ சார்பில் போட்டியிட்ட கன்ஹையாகுமார். அந்த தொகுதியில் பாஜக சார்பில் கிரிராஜ் சிங் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  பாடலிபுத்திரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மிஷா பாரதியும் பாஜகவை சேர்ந்த ராம் க்ரிபால் யாதாவும் போட்டியிட்டனர்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: General election 2019 bihar results how nitish paswan rode modi bandwagon to bihar triumph

Next Story
ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன?Chennai Today Weather NEM latest updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express