Lok Sabha Election Phase 3 Polling Live Updates : கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, அசாம், பிகார், மேற்கு வங்கம் உட்பட 15 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகள், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகள், கோவாவில் உள்ள 2 தொகுதிகள் என ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது.
Lok Sabha Election Phase 3 Polling Live Updates
அதே சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இன்று அனந்த்நாக் மாவட்டத்தில் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. சோபியன், புல்வாமா, மற்றும் குல்காம் மாவட்டங்களில் அடுத்த இரண்டு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியினை படிக்க
ராகுல் காந்தியின் வயநாட்டு தொகுதியிலும், அமித் ஷாவின் காந்திநகர் தொகுதியிலும் இன்று தேர்தல்கள் நடைபெறுகின்றன. அசாம் (4), பிஹார் (5), சத்தீஸ்கர் (7), குஜராத் (26 – ஒரே கட்டமாக), கோவா (2 – ஒரே கட்டமாக), ஜம்மு காஷ்மீர் (1), கர்நாடகா (14), கேரளா (20 – ஒரே கட்டமாக), மகாராஷ்ட்ரா (14), ஒடிசா (6), உ.பி (10), மேற்கு வங்கம் (5), தாத்ரா நாகர் ஹாவேலி (1), டையூ டாமன் (1), திரிபுரா (1) – என 116 தொகுதிகள், 15 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறுகிறது.
Live Blog
ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தலும், ஏப்ரல் 18ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
11 மணி வரை கேரளத்தில் 23.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் 26.88% வாக்குகளும், சபரிமலை அமைந்திருக்கும் பத்தினம்திட்டாவில் 24.45% வாக்குகளும் திருவனந்தபுரத்தில் 24.68% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருக்கும் மாதப்பூர் வாக்குச் சாவடியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாக்களித்தார் கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா. அவருடன் அவருடைய மனைவி பூஜா பபரி, அவருடைய தந்தை அரவிந்த் புஜாராவும் வாக்களித்தனர். தேர்தல் ஆணையத்தின் தூதராகவும் செயல்பட்டார் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தன்னுடைய வாக்கினை ராம்பூர் தொகுதியில் இருக்கும் தனியாபூர் வாக்குச்சாவடியில் பதிவு செய்துள்ளார்.
Cast my vote at Daniyapur, Shankarpur (Rampur) today for Lok Sabha election. Huge voter turnout proves people” enthusiasm to further strengthen the Indian democracy. pic.twitter.com/czg23ZpAGG
— Chowkidar Mukhtar Abbas Naqvi (@naqvimukhtar) 23 April 2019
பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் அவருடைய மனைவி சோனல் ஷா இருவரும் நரன்பூரா பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடியில் தங்களின் வாக்கினை பதிவு செய்தார்கள்.
Gujarat: BJP President Amit Shah and his wife Sonal Shah cast their votes at polling booth in Naranpura Sub-Zonal office in Ahmedabad pic.twitter.com/0lNdyv0XDp
— ANI (@ANI) 23 April 2019
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தன்னுடைய மனைவி அஞ்சலியுடன் ராஜ்கோட்டில் இருக்கும் அனில் க்யான் மந்திர் பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
Gujarat Chief Minister Vijay Rupani and wife Anjali cast their vote at a polling booth in Anil Gyan Mandir school in Rajkot #LokSabhaElections2019 pic.twitter.com/miLteXNl9X
— ANI (@ANI) 23 April 2019
கண்ணூர் மாவட்டடத்தில் உள்ள அமலா பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் கேரளா முதல்வர் பினராய் விஜயன்.
Kerala: CM P. Vijayan queues up to casts his vote at polling booth in RC Amala Basic UP School in Pinarayi in Kannur district. #LokSabhaElections2019 pic.twitter.com/LLydBK4FcN
— ANI (@ANI) 23 April 2019
இன்று காலை தன்னுடைய வாக்கினை பதிவு செய்வதற்காக குஜராத் சென்றார் மோடி. காந்திநகரில் இருக்கும் தன்னுடைய தாயை சந்தித்துவிட்டு, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பினை அளித்தனர் பாஜகவினர். இந்நிகழ்வில் மோடியுடன் பாஜக தலைவர் அமித் ஷா இருந்தார்.
PM Shri @narendramodi to cast his vote at polling booth in Nishan Higher Secondary School in Ranip, Ahmedabad for General Election 2019. https://t.co/rkVIYGoVrE
— BJP (@BJP4India) 23 April 2019
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ரனிப் பகுதியில் அமைந்திருக்கும் நிஷான் பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
PM Narendra Modi after casting his vote at Nishan High School in Ranip area of Ahmedabad. @IndianExpress pic.twitter.com/Y5vH5eDdFE
— parimal dabhi (@parimaldabhi) 23 April 2019
அதே போல், கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் இன்று போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு தென்னிந்தியாவில் காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights