இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாளைய தினம்.. எல்லாம் சரியாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சூசகம்!

அனைத்து கருத்துக்கணிப்பிலும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்

lok sabha Election result : ஒட்டு மொத்த இந்தியாவும் நாளைய (மே 23) தினத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்துள்ளது. மே 19 ஆம் தேதி கடைசிக் கட்டமாக 59 தொகுதிகளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன. அன்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

பிரபல செய்தி நிறுவனங்கள் ஒரு சேர வெளியிட்ட அனைத்து கருத்துக்கணிப்பிலும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக அரசு வாக்கு மின்னணு இயந்திரத்தில் கோளாறு நிகழ்ச்சி இருப்பதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதற்கிடையை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு தலைமையில் 22 எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து கடந்த 21 ஆம் தேதி தேர்தல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க.,வினர் மாற்ற முயற்சிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களோடு முன் வைத்து வருகின்றனர். பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் வாகனத்தில் எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

உ.பி- யில் ஒரு ஒட்டலில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றி செல்வது போல் காட்சிகள் அந்த வீடியோவில் இட்ம் பெற்றிருந்தனர். இதனால் சமாஜ் வாடி, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்திற்கு சமாஜ்வாடி – பகுஜன் கூட்டணி வேட்பாளர் அப்சல் அன்சாரி தலைமை தாங்கினார். ’

இந்நிலையில்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து மாற்றப்படுவதாக வந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிச்செல்வதுபோல் ஊடகங்களில் வெளியான காட்சிகள் உண்மையல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துளளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் 93 கூட்டங்களை நடத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் நடைமுறை குறித்து கட்சிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படையினர் ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையம் முன்பும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய பலத்த பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே சென்று விட முடியாது. தேர்தல் ஆணையம் செய்துள்ள பாதுகாப்பை தவிர வேட்பாளர்களும் தங்களது முகவர்கள் மூலம் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் 24 மணி நேரமும் அங்குதான் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மீறி எப்படி மின்னணு எந்திரங்களை கடத்தி சென்று விட முடியும். எனவே அடிப்படை ஆதாரமே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளை யாரும் நம்ப வேண்டாம்.

உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் பயன்படுத்தாத அதாவது கையிருப்பு வைக்கப்பட்டு இருந்த மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றபோது தான் அதுபற்றி தெரியாமல் வதந்தியை பரப்பி விட்டனர். அத்தகைய இடங்களில் மின்னணு எந்திரம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜான்சி தொகுதியிலும் பயன்படாத மின்னணு எந்திரங்களை கொண்டு சென்றதால்தான் கட்சி தொண்டர்கள் சந்தேகத்தில் வதந்தியை பரப்பிவிட்டனர். தற்போது அங்கும் உரிய விளக்கம் அளித்த பிறகு பிரச்சினை தீர்ந்துள்ளது.

21 ஆம் தேதி டெல்லியில் எதிர்கட்சியினர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அகமது பட்டேல், அசோக் கெலாட், அபிஷேக் மனுசிங்வி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி சதீஷ்சந்திர மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓபிரெய்ன், சமாஜ்வாடி கட்சி ராம்கோபால் யாதவ், தி.மு.க. கனிமொழி எம்.பி., ராஷ்டிரீய ஜனதாதளம் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் மஜீத் மேமன், தேசிய மாநாட்டு கட்சி டேவிந்தர் ரானா ஆகியோர் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டு எண்ணிக்கைக்கு பின்னர் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத ஒரு அரசை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து குலாம்நபி ஆசாத், சந்திரபாபு நாயுடு, சதீஷ் மிஸ்ரா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ராம் கோபால் யாதவ், கனிமொழி எம்.பி. உள்பட 22 கட்சி பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்தனர்.

விவிபாட் கருவியின் ஒப்புகை சீட்டை எண்ணுவது மற்றும் சில மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனியார் வாகனங்களில் கொண்டுசெல்லப்படுவதாக வந்துள்ள புகார் உள்பட சில பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close